News October 3, 2025
தமிழ்நாடு முழுவதும் தடை: அரசு அறிவிப்பு

தமிழ்நாடு முழுவதும் ‘Coldref’, ‘Nextro’ ஆகிய இரண்டு இருமல் சிரப்களை விற்கவும் விநியோகிக்கவும் அரசு தடை விதித்துள்ளது. ம.பி., மகா., மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் இந்த மருந்துகளை குடித்த 11 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இந்த சிரப்களுக்கு தடை விதித்ததுடன், இவை தொடர்பாக தீவிர ஆய்வுக்கும் விசாரணைக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது. குழந்தைகளுக்கு இருமல் சிரப் கொடுக்குமுன் டாக்டரிடம் ஆலோசிக்கவும். SHARE!
Similar News
News October 4, 2025
செவ்விந்தியர்கள் பொன்மொழிகள்

*அமைதிக்காக அழாதீர்கள், அமைதிக்காக செயல்படுங்கள்.
*என்னிடம் சொல், நான் மறந்துவிடுவேன்; காண்பி, நினைவில் நிறுத்த முடியாமல் போகலாம்; என்னை ஈடுபடுத்து, அப்போது புரிந்து கொள்வேன்.
*குறைவாகப் பேசும் வாயும், அதிகமாக உழைக்கும் கரங்களும் எப்போதும் சிறந்தவை.
*மனிதரின் சட்டங்கள் மனிதருக்கு மனிதர் மாறுபடும். ஆனால் இயற்கையின் சட்டங்கள் ஒருபோதும் மாறுவதில்லை. *நமது முதல் ஆசிரியர், நம் இதயமே.
News October 4, 2025
அமைதியை நிலைநாட்ட ஹமாஸ் ஒப்புதல்

இஸ்ரேல் – ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான 20 அம்சங்கள் அடங்கிய அமைதி திட்டத்தை டிரம்ப் முன்மொழிந்திருந்தார். இதற்கு இஸ்ரேல் ஒப்புதல் வழங்கிய நிலையில், ஹமாஸ் ஒப்புதல் அளிக்க ஞாயிறு வரை அவகாசம் கொடுத்திருந்தார் டிரம்ப். இந்நிலையில், அனைத்து பணயக் கைதிகளையும் விடுவித்தல், அதிகாரத்தை கைவிடுதல் உள்ளிட்ட சிலவற்றிற்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்துள்ளது. மீதமுள்ள அம்சங்கள் ஆலோசனையில் உள்ளது.
News October 4, 2025
மீண்டும் களத்தில் ரோஹித் – விராட்

ஆஸி.,வுக்கு சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணி, 3 ODI, 5 T20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அக்.19-ல் தொடங்கவுள்ள இத்தொடருக்கான வீரர்கள் பட்டியல் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக, இந்த தொடரில் டெஸ்ட், டி20 விளையாட்டுகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ள ரோஹித் – விராட் இருவரும் களம் காண்கின்றனர். ரோஹித்தின் ODI கேப்டன்சிக்கு ரசிகர்கள் வெயிட்டிங்கில் உள்ளனர்.