News October 3, 2025
இரவில் தூங்குவதற்கு எந்தப் பக்கம் சிறந்தது?

இரவு படுக்கும் போது, எந்த பக்கம் படுத்தால் நல்லது என்ற கேள்வி பலருக்கும் உண்டு *இடது பக்கமாகப் படுக்கும்போது, உணவு நிரம்பிய இரைப்பையானது கல்லீரலை அழுத்தாது. இதனால், செரிமானம் சிறப்பாக ஊக்குவிக்கப்படும் *இடதுபக்கம் படுக்கும்போது ரத்த ஓட்டம் நன்றாக நடக்கும். இதயத்துக்கும் நல்லது *வலது பக்கமாக படுக்கும்போது சுவாசக் குழாய் அழுத்தப்பட்டு, அப்போது குறட்டை ஏற்படும். நீங்க எந்த பக்கம் படுக்குறீங்க?
Similar News
News October 4, 2025
டாப் 50-யில் சென்னை உணவகங்கள்

2025-ம் ஆண்டிற்கான இந்தியாவின் சிறந்த 50 உணவகங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மும்பையில் – 13, பெங்களூருவில் – 9, டெல்லியில் – 9, கோவாவில் – 8, சென்னையில் – 5, கொல்கத்தாவில் – 3 உணவகங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக சென்னையில் மிகவும் பிரபலமான ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் உள்ள அவர்தனா உணவகம் 8-வது இடத்தை பிடித்துள்ளது. உங்களுக்கு பிடித்த உணவகம் எது? கமெண்ட்ல சொல்லுங்க.
News October 4, 2025
சதத்தை ராணுவத்துக்கு சமர்பித்த துருவ் ஜுரெல்

வெஸ்ட் இன்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்டில் துருவ் ஜுரெல் சதம் (125 ரன்கள்) விளாசி அசத்தினார். தனது அரைசத வெற்றியை தனது தந்தைக்கும், சதம் அடித்த கொண்டாட்டத்தை இந்திய ராணுவத்துக்கும் சமர்பிப்பதாக நெகிழ்வுடன் கூறியுள்ளார். இந்த வார்த்தையை இந்திய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். முன்னதாக, பாக்.,க்கு எதிராக பெற்ற ஆசிய கோப்பை வெற்றியை ராணுவத்துக்கு சமர்பிப்பதாக சூர்யகுமார் யாதவ் கூறியிருந்தார்.
News October 4, 2025
இன்றைய நல்ல நேரம்

▶அக்டோபர் 4, புரட்டாசி 18 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶திதி: திதித்துவம் ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: வளர்பிறை