News October 3, 2025

பிரேக்கப் செய்த AI.. குமுறும் நெட்டிசன்ஸ்

image

பலரும் AI-ஐ தனது காதலி, காதலன், துணை, நண்பன் என உறவாடி ஆறுதலடைகின்றனர். இந்நிலையில், மனிதர்களுடனான உறவே அர்த்தமுள்ளதாக இருக்கும் என்று ChatGPT-யின் புதிய அப்டேட் தற்போது பரிந்துரைப்பதாக பலரும் SM-ல் புலம்பித் தள்ளுகின்றனர். மனிதர்களுடன் உறவாடுங்கள் என்று சொன்னது இவர்களுக்கு பிடிக்கலையாம். இதனால், இந்த AI எங்களிடம் கல்நெஞ்சத்துடன் நடந்து கொள்வதாக குமுறுகின்றனர். உங்க கருத்து என்ன?

Similar News

News October 4, 2025

சதத்தை ராணுவத்துக்கு சமர்பித்த துருவ் ஜுரெல்

image

வெஸ்ட் இன்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்டில் துருவ் ஜுரெல் சதம் (125 ரன்கள்) விளாசி அசத்தினார். தனது அரைசத வெற்றியை தனது தந்தைக்கும், சதம் அடித்த கொண்டாட்டத்தை இந்திய ராணுவத்துக்கும் சமர்பிப்பதாக நெகிழ்வுடன் கூறியுள்ளார். இந்த வார்த்தையை இந்திய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். முன்னதாக, பாக்.,க்கு எதிராக பெற்ற ஆசிய கோப்பை வெற்றியை ராணுவத்துக்கு சமர்பிப்பதாக சூர்யகுமார் யாதவ் கூறியிருந்தார்.

News October 4, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶அக்டோபர் 4, புரட்டாசி 18 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶திதி: திதித்துவம் ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: வளர்பிறை

News October 4, 2025

ராமனாக ராகுல்; ராவணனாக மோடி: PHOTO

image

தசரா பண்டிகையையொட்டி உ.பி., காங்., ஆபீஸ் வாசலில் வரையப்பட்டிருந்த ஓவியம் சர்ச்சையாகியுள்ளது. அதில், ராமனாக ராகுல் காந்தியும், ராவணனாக மோடியும் சித்தரிக்கப்பட்டுள்ளனர். ராவணனின் 10 தலைகளும் ஊழல், ED, ECI, CBI, Bihar SIR என சித்தரிக்கப்பட்டுள்ளன. மேலும், சாமானிய மக்களின் பிரச்னைகளை ராகுல் தீர்த்துவைப்பார் என்ற நோக்கிலேயே இதனை வரைந்த காங்., நிர்வாகி ஆர்யன் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!