News October 3, 2025
நெல்லை வந்தே பாரத் ரயில் இனி கோவில்பட்டியில் நிற்கும்

நெல்லை – சென்னை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலுக்கு நல்ல வரவேற்பு உள்ளது முதலில் எட்டு பெட்டியுடன் இயங்கிய நிலையில் பின்னர் 16 பெட்டிகளாகவும் தற்போது 20 பெட்டிகளாகவும் இணைக்கப்பட்டு இயங்குகிறது. கோவில்பட்டி பயணிகளின் கோரிக்கையை ஏற்று வந்தே பாரத் ரயில் பரிச்சாத்த முறையில் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்ல ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
Similar News
News October 4, 2025
ஜாதியை ரீதியிலான பதிவுகளுக்கு கடும் நடவடிக்கை – நெல்லை எஸ்.பி

நெல்லை எஸ்பி சிலம்பரசன் செய்தி குறிப்பில், சமூக ஊடகங்களில் சட்ட ஒழுங்கை மீறும் பதிவுகள் மீது காவல்துறை தீவிர கண்காணிப்பு செய்து வருகிறது. சமூக வலைதளங்களில் பதிவிடப்படும், பிரச்னைக்குரிய பதிவுகள், சாதிய ரீதியிலான பிரச்னைக்கு முக்கிய காரணியாக இருந்து வருவதால், இது போன்ற பதிவுகள் செய்பவர்கள் மீது தீவிர நடவடிக்கை மேற்கொண்ட நிலையில், 108 வழக்குகள் பதிவு செய்யபட்டு, 105 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
News October 3, 2025
ஆசிரியர் கூட்டணி செயற்குழுவுக்கு அழைப்பு

நெல்லை மாவட்ட ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி செயலாளர் மைக்கல் ஜார்ஜ் கமலேஷ் இன்று விடுத்துள்ள அறிக்கை: ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நாளை 4ம் தேதி பகல் 11 மணிக்கு டக்கரம்மாள்புரம் மாவட்ட கட்டிடத்தில் நடைபெறும். மாவட்டத் தலைவர் பால்ராஜ் தலைமை தாங்குகிறார். (அக்டோபர் 8) மாவட்ட தலைநகர் ஆர்ப்பாட்டம் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
News October 3, 2025
நெல்லையில் ஒரே இடத்தில் 12 சப்பரங்கள் அணிவகுப்பு

பாளையங்கோட்டையில் நடைபெறும் தசரா பண்டிகையின் மிக முக்கிய நிகழ்ச்சியான அம்மன் சப்பரங்கள் ஒரே இடத்தில் அணிவகுக்கும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. பாளையங்கோட்டை ராமசாமி கோயில் திடலில் அடுத்தடுத்து சப்பரங்கள் வந்து நின்றன. தொடர்ந்து அனைத்து சப்பரங்களுக்கும் ஒரே நேரத்தில் தீபாராதனை நடைபெற்றன. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். தொடர்ந்து சப்பரங்கள் வீதி உலா சென்றன.