News October 3, 2025
தீபாவளிக்காக முன்கூட்டியே வரும் ரேஷன் பொருள்கள்!

தீபாவளியையொட்டி பொதுமக்களிடம் பச்சரிசி, பாமாயிலுக்கான தேவை அதிகமாக இருக்கும். இதனை கருத்தில் கொண்டு அனைத்து ரேஷன் கடைகளுக்கும் தமிழக அரசு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, அக்.10-ம் தேதிக்குள் அனைத்து ரேஷன் பொருள்களையும் ஒரே கட்டமாக விநியோகிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, சேமிப்பு கிடங்குகளில் இருந்து ரேஷன் கடைகளுக்கு பொருள்கள் கொண்டு செல்லும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
Similar News
News October 4, 2025
போரை நிறுத்தலன்னா… ஹமாஸை எச்சரித்த டிரம்ப்

இஸ்ரேலுடன் போரை நிறுத்த ஹமாஸுக்கு அதிபர் டிரம்ப் கெடு விதித்துள்ளார். வரும் ஞாயிறுக்குள் ஒப்பந்தம் செய்யாவிட்டால், ஹமாஸ் நரகத்துக்கு தான் போக வேண்டியிருக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார். மத்திய கிழக்குக்கு பல்லாண்டுகளாக அச்சுறுத்தலாக உள்ள ஹமாஸ், கடந்த அக்.07, 2023-ல் இஸ்ரேலில் மிகப்பெரிய இனவழிப்பை செய்தது என்ற அவர், இதற்கு பதிலடியாக இதுவரை 25,000+ ஹமாஸ் வீரர்கள் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
News October 4, 2025
கிட்னியை விற்று ஐபோன் வாங்கியதால் வந்த வினை

ஐபோன் மீதான மோகத்தால் சீனாவில் வாலிபர் ஒருவர் படுத்த படுக்கையாக கிடக்கிறார். வாங் சாங்குன் என்பவர் 2011-ல் ஐபோன் 4 மற்றும் ஐபேட் 2 வாங்குவதற்காக தனது வலது கிட்னியை 20,000 Yuan (₹2.5 லட்சம்) விற்றுள்ளார். சில மாதங்களில் அவரது மற்றொரு கிட்னியும் பாதிப்படைந்த நிலையில், கடந்த 14 ஆண்டுகளாக டயாலிசிஸ் மிஷின் உதவியோடு உயிர் வாழ்ந்து வருகிறார்.
News October 4, 2025
விஜய் – ராஷ்மிகா ஜோடிக்கு விரைவில் டும் டும் டும் ❤️❤️❤️

தென்னிந்திய சினிமாவின் முக்கிய நட்சத்திரங்களான விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகாவும் நீண்டகாலம் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், குடும்பத்தினர் முன்னிலையில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே பங்கேற்க, அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நிறைவடைந்துவிட்டதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்தாண்டு பிப்ரவரியில் இருவரும் கரம்பிடிக்க திட்டமிட்டுள்ளார்களாம்..!