News October 3, 2025

நிலத்திலும் வாழும் மீன் எது தெரியுமா?

image

மட்ஸ்கிப்பர்கள் மீன்கள் நீரிலும், நிலத்திலும் வாழும் தன்மை கொண்டவை. இவை தனது Gills-களில் தண்ணீரை சேமித்து வைப்பதால், நிலத்தில் வாழும்போது தனது தோல், வாய் மூலம் சுவாசிக்க இதற்கு ஏதுவாக இருக்கிறது. இதன் உடல் அமைப்பு, நிலத்தில் ஊர்ந்து செல்லவும், தாவவும் உதவுகிறது. எனவே இந்த மீன்களால் நிலத்தில் 3 நாள்கள் முதல் பல வாரங்கள் வரை வாழும் என்கின்றனர். இந்த அதிசயத்தை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News October 3, 2025

குழந்தைகளை தாக்கும் டொமேட்டோ வைரஸ்

image

மத்தியப் பிரதேசத்தின் போபாலில், ஏராளமான பள்ளி மாணவர்கள் டொமேட்டோ வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தொற்று ஒரு குழந்தையிலிருந்து இன்னொரு குழந்தைக்கு எளிதில் பரவுகிறது. எனவே, பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளை வீட்டிலேயே வைத்திருக்குமாறு பள்ளிகள் பெற்றோருக்கு அறிவுறுத்தியுள்ளன. இந்த வைரஸ், 7-10 நாள்களுக்குள் குணமாகிவிடும். இதனால் அச்சுறுத்தல் இல்லை என்று மருத்துவர்கள் விளக்குகின்றனர்.

News October 3, 2025

பழங்கள் சாப்பிடுவதன் நன்மைகள்

image

பல பழங்களில் வைட்டமின்கள் நிறைந்திருக்கும். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பழங்களில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்துகிறது. நல்ல கொழுப்புகள் இரத்த ஓட்டத்தை சீராக்குகின்றன. மேலே, எந்த பழங்களில் என்ன உள்ளன என்பதை, போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், உங்களுக்கு பிடித்த பழம் எது? கமெண்ட்ல சொல்லுங்க.

News October 3, 2025

தமிழ்நாடு முழுவதும் தடை: அரசு அறிவிப்பு

image

தமிழ்நாடு முழுவதும் ‘Coldref’, ‘Nextro’ ஆகிய இரண்டு இருமல் சிரப்களை விற்கவும் விநியோகிக்கவும் அரசு தடை விதித்துள்ளது. ம.பி., மகா., மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் இந்த மருந்துகளை குடித்த 11 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இந்த சிரப்களுக்கு தடை விதித்ததுடன், இவை தொடர்பாக தீவிர ஆய்வுக்கும் விசாரணைக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது. குழந்தைகளுக்கு இருமல் சிரப் கொடுக்குமுன் டாக்டரிடம் ஆலோசிக்கவும். SHARE!

error: Content is protected !!