News October 3, 2025
அமைதி வெற்றிக்கான அறிகுறி: செங்கோட்டையன்

அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணி தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அமைதியாக இருப்பது வெற்றிக்கான அறிகுறி என்றும், தனது ஆதரவாளர்களை அதிமுகவில் இருந்து நீக்குவது அரசியலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது எனவும் கூறியுள்ளார். விரைவில் நன்மை நடக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Similar News
News October 3, 2025
தமிழ்நாடு முழுவதும் தடை: அரசு அறிவிப்பு

தமிழ்நாடு முழுவதும் ‘Coldref’, ‘Nextro’ ஆகிய இரண்டு இருமல் சிரப்களை விற்கவும் விநியோகிக்கவும் அரசு தடை விதித்துள்ளது. ம.பி., மகா., மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் இந்த மருந்துகளை குடித்த 11 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இந்த சிரப்களுக்கு தடை விதித்ததுடன், இவை தொடர்பாக தீவிர ஆய்வுக்கும் விசாரணைக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது. குழந்தைகளுக்கு இருமல் சிரப் கொடுக்குமுன் டாக்டரிடம் ஆலோசிக்கவும். SHARE!
News October 3, 2025
ரூபாய் அச்சிட எவ்வளவு செலவு ஆகுது தெரியுமா?

இந்திய நாணயத்தின் மதிப்பை விட அதன் தயாரிப்பு செலவு அதிகம். அது உங்களுக்கு தெரியுமா? நாணயம் மற்றும் நோட்டுகளின் உற்பத்தி செலவு எவ்வளவு என்பதை மேலே போட்டோக்களில் கொடுத்திருக்கிறோம். அவற்றை ஸ்வைப் செய்து பாருங்க. உங்க கருத்த கமெண்ட்ல சொல்லுங்க. தற்போது டிஜிட்டல் பணப்பரிமாற்றம் அதிகரித்து வருவதால், நோட்டு மற்றும் நாணயங்கள்
தயாரிப்பதற்கான தேவை குறைந்து வருகிறது.
News October 3, 2025
குழந்தைகளுக்கு இருமல் மருந்து: அரசு எச்சரிக்கை!

2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் சிரப் கொடுப்பது குறித்து மத்திய அரசு எச்சரித்துள்ளது. அண்மையில் ம.பி., மற்றும் மகாராஷ்டிராவில் இருமல் சிரப் உட்கொண்ட 11 பேர் உயிரிழந்தனர். அவர்கள் ‘Coldref’, ‘Nextro’ சிரப்களை உட்கொண்டது தெரியவந்துள்ளது. அந்த மருந்துகளில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் கலப்படமாக இருந்ததால், மரணங்கள் ஏற்பட்டிருக்கலாம் என அரசு சந்தேகப்படுகிறது. ஆகவே, டாக்டரை ஆலோசிக்கவும்.