News October 3, 2025
இவர்தான் நம் ரோல்மாடல்!

100% பார்வை இழந்தவர் என்ற போதிலும், IFS தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் பெண் என்ற பெருமையுடன் பலருக்கும் முன்மாதிரியாக திகழ்கிறார் பினோ செபைன். சென்னையில் பிறந்த இவர், ஆங்கிலத்தில் Masters டிகிரி முடித்தவர். SBI வங்கியில் வேலை செய்து கொண்டே தனது UPSC கனவை துரத்தியவர், தனது விடாமுயற்சியால் 2014-ல் 2-வது முயற்சியிலேயே தேர்ச்சியடைந்தார். இவர்தான் நம் ரோல்மாடல்!
Similar News
News April 2, 2026
தவெக, நாதகவை கண்டுகொள்ளாத ஸ்டாலின்

தேர்தல் பிரசாரங்களில் பாஜக, அதிமுகவை கடுமையாக விமர்சிக்கும் ஸ்டாலின், தவெக & நாதக பற்றி பேசுவதை தவிர்க்கிறார். அக்கட்சிகளின் தலைவர்களான விஜய்யும், சீமானும் தன்னை பற்றி என்ன விமர்சனம் செய்தாலும் அதைப்பற்றி ஸ்டாலின் பெரிதும் பொருட்படுத்துவதில்லை. போட்டியிலேயே இல்லாத அவர்களை பற்றிப் பேசி பெரிய ஆளாக்கிட வேண்டாம் என ஸ்டாலின் எண்ணுவதாகவும், இது சாதுர்யமான நகர்வு என்றும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
News April 2, 2026
ரவீந்திரநாத் தாகூர் பொன்மொழிகள்

*நிலத்தை பண்படுத்தும் உழவனிடமும், கல்லுடைக்கும் தொழிலாளியிடமும் இறைவன் இருக்கிறான் *பெண்கள் மகிழ்ச்சியோடு இருப்பதில் தான், ஒட்டுமொத்த குடும்பத்தின் மகிழ்ச்சியே அடங்கி இருக்கிறது. வாழ்வில் இசை என்பது பெண்களின் சிரிப்பில் தான் புதைந்து கிடக்கிறது *மனித உறவுகள் அன்பினால் பிணைக்கப்பட்டுள்ளன. அன்பு எனும் பாலத்தின் வழியாகப் பயணம் செய்தால் தான், நம் வாழ்க்கை சுகமானதாக இருக்கும்.
News April 2, 2026
IPL: ஆரஞ்ச், ஊதா தொப்பி யாரிடம்?

நடப்பு IPL தொடரில் அனைத்து அணிகளும் ஒரு போட்டியில் விளையாடிவிட்டன. இதில் RR, RCB, DC, MI, PKBS வெற்றி பெற்றுள்ள நிலையில், நெட் ரன்ரேட் அடிப்படையில் ராஜஸ்தான் அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 81 ரன்கள் குவித்து ஆரஞ்ச் தொப்பியை ரயன் ரிக்கல்டன் தன் வசப்படுத்தியுள்ளார். 7 வீரர்கள் தலா 3 விக்கெட் எடுத்திருந்தாலும், எகானமி அடிப்படையில் ஜேக்கப் டஃபி ஊதா தொப்பியை பெற்றுள்ளார்.


