News October 3, 2025
BREAKING: தங்கம் விலையில் அதிரடி மாற்றம்

ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் 2 முறை மாற்றம் அடைவது வாடிக்கையாகி இருக்கிறது. இன்று காலையில் சவரனுக்கு ₹880 குறைந்ததால் மக்கள் சற்று நிம்மதி அடைந்தனர். இந்நிலையில், மாலையில் ₹480 அதிகரித்து அதிர்ச்சி கொடுத்துள்ளது. தற்போது, 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹10,900-க்கும் 1 சவரன் ₹87,200-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை தொடர்ந்து உச்சத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News October 3, 2025
இத சொல்லி கொடுக்கலன்னா குழந்தைகள் கஷ்டப்படுவாங்க!

பெற்றோர்களே, உங்கள் பிள்ளைக்கு 13 வயது ஆகிவிட்டதா? நிதி & சேமிப்பு பற்றி சொல்லிக்கொடுங்க ➤அத்தியாவசிய தேவைகள் மற்றும் விருப்பங்களை வேறுபடுத்திப் பார்க்க கற்றுக்கொடுங்க ➤வங்கி சேமிப்பு கணக்கு மூலம் பணத்தை சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கவும் ➤தேவையில்லாத கடன்களை வாங்குவதால் வரும் விளைவுகள் பற்றி கற்றுக்கொடுங்க ➤காப்பீடு தொடங்குவதன் முக்கியத்துவத்தை பற்றி எடுத்துரையுங்கள். SHARE.
News October 3, 2025
இரவில் தூங்குவதற்கு எந்தப் பக்கம் சிறந்தது?

இரவு படுக்கும் போது, எந்த பக்கம் படுத்தால் நல்லது என்ற கேள்வி பலருக்கும் உண்டு *இடது பக்கமாகப் படுக்கும்போது, உணவு நிரம்பிய இரைப்பையானது கல்லீரலை அழுத்தாது. இதனால், செரிமானம் சிறப்பாக ஊக்குவிக்கப்படும் *இடதுபக்கம் படுக்கும்போது ரத்த ஓட்டம் நன்றாக நடக்கும். இதயத்துக்கும் நல்லது *வலது பக்கமாக படுக்கும்போது சுவாசக் குழாய் அழுத்தப்பட்டு, அப்போது குறட்டை ஏற்படும். நீங்க எந்த பக்கம் படுக்குறீங்க?
News October 3, 2025
BREAKING: விஜய்க்கு புதிய நெருக்கடி

பரப்புரையை ஒத்திவைத்த விஜய்க்கு மேலும் நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளது. கரூர் துயரம் தொடர்பான வழக்கில் தவெகவிற்கு கடும் கண்டனம் தெரிவித்த ஜட்ஜ் செந்தில்குமார், குறைந்தபட்ச பொறுப்புகூட இல்லை என காட்டமாக விமர்சித்துள்ளார். மேலும், விஜய் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்யாதது வருத்தமளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால், இந்த விவகாரத்தில் விஜய் மீதும் நடவடிக்கை எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.