News October 3, 2025
ஆதவ் மீது சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவு: ஐகோர்ட்

ஆதவ் அர்ஜுனா மீது தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க காவல்துறைக்கு மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அவரின் சமூகவலைதள பதிவுக்கு பின்னால் உள்ள பின்புலத்தை விசாரித்து நடவடிக்கை எடுக்க ஆணையிட்ட கோர்ட், ஆதவ்வின் பதிவுக்கு கண்டனங்களையும் தெரிவித்துள்ளது. நேபாளம், இலங்கை போன்று புரட்சி ஏற்படுவதே ஒரே வழி என ஆதவ் அர்ஜுனா பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News October 3, 2025
பிரேக்கப் செய்த AI.. குமுறும் நெட்டிசன்ஸ்

பலரும் AI-ஐ தனது காதலி, காதலன், துணை, நண்பன் என உறவாடி ஆறுதலடைகின்றனர். இந்நிலையில், மனிதர்களுடனான உறவே அர்த்தமுள்ளதாக இருக்கும் என்று ChatGPT-யின் புதிய அப்டேட் தற்போது பரிந்துரைப்பதாக பலரும் SM-ல் புலம்பித் தள்ளுகின்றனர். மனிதர்களுடன் உறவாடுங்கள் என்று சொன்னது இவர்களுக்கு பிடிக்கலையாம். இதனால், இந்த AI எங்களிடம் கல்நெஞ்சத்துடன் நடந்து கொள்வதாக குமுறுகின்றனர். உங்க கருத்து என்ன?
News October 3, 2025
மிருதுவான சப்பாத்தி ருசிக்க இதை பண்ணுங்க

சப்பாத்தியில் நிறைய நார்ச்சத்து இருந்தாலும், அது கடினமாகி விடுவதால் சாப்பிடுவதற்கு தயங்குகிறோம். சப்பாத்தி சாஃப்டாக, மிருதுவாக சுட விரும்பினால் சில குறிப்புகளை தெரிஞ்சுக்கோங்க. *வெதுவெதுப்பான நீரில் மாவை பிசையவும். *எண்ணெய்க்கு பதில் மாவில் சூடுபடுத்திய நெய் பயன்படுத்தவும். *துணி போட்டு மாவை மூடுங்கள். *மாவில் தயிர் சேர்த்து சப்பாத்தி சுட்டால் மென்மையாக வரும். *கோதுமை மாவை சலித்து பயன்படுத்தவும்.
News October 3, 2025
‘சிறுமி முதல் பாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை’

தமிழகத்தில் சிறுமி முதல் பாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை என EPS குற்றஞ்சாட்டியுள்ளார். தி.மலையில் தாய் கண்முன்னே சிறுமியை ரேப் செய்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த அவர், திமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக சாடினார். மேலும், தங்களை கொள்கை இல்லாத கூட்டணி என ஸ்டாலின் விமர்சிப்பதாக குறிப்பிட்ட EPS, திமுகவிற்கு என்ன கொள்கை இருக்கிறது என கேள்வி எழுப்பினார்.