News October 3, 2025
பாகிஸ்தானின் 5 போர் விமானங்களை அழித்தோம்

Op Sindoor-ல் பாகிஸ்தானின் 4-5 போர் விமானங்களை வீழ்த்தியதாக இந்திய விமானப்படை (IAF) தலைமை தளபதி அமர்பிரீத் சிங் தெரிவித்துள்ளார். இதில் அமெரிக்க தயாரிப்பான F-16, சீன தயாரிப்பான JF 17 ரக விமானங்கள் அடங்கும். இந்திய விமானங்களை வீழ்த்தியதாக PAK சொல்வது கட்டுக்கதை என்ற அவர், அந்நாட்டின் போர் விமானங்களை மட்டுமின்றி, ரேடார்கள், கட்டுப்பாட்டு மையங்களையும் கூட துவம்சம் செய்ததாக கூறியுள்ளார்.
Similar News
News October 3, 2025
இந்த பழக்கங்கள் இருக்கா.. உடனே நிறுத்துங்க!

*சாப்பிடும்போது இடையில் தண்ணீர் குடிப்பது செரிமானத்தை குறைக்கும் *போனை தலையணைக்கு அடியில் வைப்பது தூக்கத்தை குலைக்கும் *நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது ரத்தம் உறையும் அபாயத்தை அதிகரிக்கும் *மிகவும் சூடாக உணவை சாப்பிடுவது உணவுக்குழாய் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் *Buds-ஐ காதில் போட்டு நோண்டுவது செவித்திறனை பாதிக்கும். சின்ன விஷயங்கள் என புறக்கணிக்க வேண்டாம். கவனமா இருங்க. SHARE IT.
News October 3, 2025
துயரத்தில் விஜய் அரசியல் செய்வது சரியல்ல: ஜோதிமணி

இக்கட்டான சூழலில், பாதிக்கப்பட்ட குடும்பத்துடன் தான் இருக்கிறேன் என விஜய் சொல்லி இருக்க வேண்டும் என MP ஜோதிமணி தெரிவித்துள்ளார். துயரம் நடந்த நேரத்தில் விஜய் அரசியல் செய்வது சரியானது அல்ல எனவும் கூறியுள்ளார். விஜய்யுடன் ராகுல் காந்தி பேசியதை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் எனவும், வெளிநாட்டில் இருந்து ராகுல் வந்த பிறகே உண்மையில் அவர் பேசினாரா என்ற விபரமே தெரியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
News October 3, 2025
தீபாவளிக்காக முன்கூட்டியே வரும் ரேஷன் பொருள்கள்!

தீபாவளியையொட்டி பொதுமக்களிடம் பச்சரிசி, பாமாயிலுக்கான தேவை அதிகமாக இருக்கும். இதனை கருத்தில் கொண்டு அனைத்து ரேஷன் கடைகளுக்கும் தமிழக அரசு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, அக்.10-ம் தேதிக்குள் அனைத்து ரேஷன் பொருள்களையும் ஒரே கட்டமாக விநியோகிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, சேமிப்பு கிடங்குகளில் இருந்து ரேஷன் கடைகளுக்கு பொருள்கள் கொண்டு செல்லும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.