News October 3, 2025
கரூர் துயரத்திற்கு CM ஸ்டாலின் தான் பொறுப்பு: NDA குழு

கரூர் துயரத்திற்கு CM ஸ்டாலினே முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும் என NDA குழு தெரிவித்துள்ளது. CM-க்கு NDA குழு அனுப்பிய கடித்ததில், தடுப்பு நடவடிக்கைகள் இருந்தபோதிலும் நெரிசல் ஏற்பட காரணம் என்ன? நெரிசலுக்கு வழிவகுத்த முதன்மைக் காரணிகள் குறித்த அறிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சமர்ப்பிக்க அறிவுறுத்தியுள்ளது. இந்த விஷயத்தில் உரிய நேரத்திற்குள் CM-ன் பதிலை எதிர்பார்ப்பதாகவும் NDA குழு கூறியுள்ளது.
Similar News
News October 3, 2025
இனி தண்ணீரை இப்படி குடிச்சு பாருங்க!

உடம்பு ரொம்ப டயர்டா? எனர்ஜி இல்லாமல் இருக்கிறதா? உடனே ஏதாவது ஒரு மருந்தை தேடி ஓடாமல், இவற்றை ட்ரை பண்ணுங்க. வெறும் தண்ணீரில் லெமன் முதல் இஞ்சி வரை கலந்து குடிப்பதால், கிடைக்கும் நன்மைகளை மேலே அடுத்தடுத்த படங்களில் கொடுத்துள்ளோம். போட்டோவை வலது பக்கமாக Swipe பண்ணி பார்க்கவும். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிரவும்.
News October 3, 2025
ஸ்டாலின் செய்வது அரசியல் இல்லாமல், அவியலா? EPS

ராமநாதபுரத்தில் <<17901865>>CM பேசியதற்கு<<>> EPS பதிலடி கொடுத்துள்ளார். கரூருக்கு ஓடோடி சென்ற நீங்கள், கள்ளக்குறிச்சிக்கு ஏன் செல்லவில்லை, வேங்கைவயலுக்கு ஏன் செல்லவில்லை என அடுக்கடுக்கான கேள்விகளை EPS எழுப்பியுள்ளார். மேலும் நீங்கள் செய்வது அரசியல் இல்லாமல், அவியலா எனவும் கேட்டுள்ளார். குறைபாடுகளை சுட்டிக் காட்டினால், அது உங்களுக்கு கூட்டணிக் கணக்காக தெரிகிறது என்றும் கூறியுள்ளார்.
News October 3, 2025
BREAKING: விஜய் கட்சிக்கு பெரும் பின்னடைவு

கரூர் துயர சம்பவம் தொடர்பான வழக்கில் N.ஆனந்த், CTR நிர்மல் குமாரின் முன்ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இதனையடுத்து, அவர்கள் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது. ஏற்கெனவே மா.செ., மதியழகன் கைதான நிலையில், ஆதவ் அர்ஜுனா மீதும் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கட்சியின் முக்கியத் தலைவர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டிருப்பது, தவெக தரப்புக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.