News October 3, 2025
குமரியில் தேவையான விதை நெல் கையிருப்பு உள்ளது

கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டாவது பருவ நெல் சாகுபடி பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நெல் விதைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மாவட்டத்தில் இரண்டாவது பருவத்திற்கு தேவையான நெல் விதைகள் போதிய அளவில் கையிருப்பில் உள்ளதாக வேளாண் அதிகாரிகள் இன்று தெரிவித்தனர். விதை நாள் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கு இடமில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
Similar News
News October 3, 2025
குமரி அணைகளின் இன்றைய நீர் இருப்பு விவரம்

குமரியில் பாசனத்திற்கு பயன்படும் அணைகளின் இன்றைய (அக் 3) நீர்மட்ட விவரம்; பேச்சிப்பாறை அணை – 40.26 அடி (மொத்தம் 48 அடி), பெருஞ்சாணி அணை – 59. 50 அடி (77 அடி), சிற்றாறு 1 அணை – 7. 31 அடி (18 அடி), சிற்றாறு 2 அணை – 7.41 அடி (18 அடி) நீர் உள்ளது. மேலும் பேச்சிப்பாறைக்கு 523 கனஅடி, பெருஞ்சாணிக்கு 225 கனஅடி நீர்வரத்தும் உள்ளது.
News October 3, 2025
குமரி – திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதை பணி அப்டேட்

கன்னியாகுமரி – திருவனந்தபுரம் இடையேயான 87 கிலோமீட்டர் இரட்டை ரயில் பாதை பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. 2026 ஆண்டுக்குள் இந்த திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வர எதிர்பார்க்கப்படுகிறது.பணிகளுக்காக மத்திய ரயில்வே கடந்த 2023-24 மற்றும் 2024-25 நிதியாண்டுகளில் ரூ.940 கோடி விடவை நிதியை ஒதுக்கியுள்ளது. சமீபத்தில் கூடுதல் ரூ.575 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
News October 3, 2025
குமரி: காரில் 810 லிட்டர் மண்ணெண்ணெய் கடத்தல்

குமரி, நித்திரவிளை போலீசார் நேற்று மாங்காடு பகுதியில் ரோந்து சென்ற போது வேகமாக வந்த ஒரு காரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். காரில் 26 பிளாஸ்டிக் கேன்களில் படகுகளுக்கு வழங்கப்படும் மானிய விலை மண்ணெண்ணெய் 910 லிட்டர் இருந்தது. போலீசார் காருடன் மண்ணெண்ணெயை பறிமுதல் செய்தனர். காரை ஓட்டி வந்த டிரைவர் ஜாண் பெஸ்கி என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.