News October 3, 2025
மாதம் ₹7,000.. உடனே அப்ளை பண்ணுங்க!

மத்திய அரசின் எல்ஐசி பீமா சகி யோஜனா திட்டம், கிராமப்புற பகுதிகளில் உள்ள 18-70 வயதுடைய பெண்களுக்கு எல்ஐசி முகவர்களாக பணியாற்றுவதற்கான பயிற்சி மற்றும் மாதந்தோறும் ₹7,000 உதவித்தொகை வழங்குகிறது. உதவித்தொகையோடு அளிக்கப்படும் 3 ஆண்டு பயிற்சியை முடித்தால், எல்ஐசி முகவர்களாக பணியாற்றலாம். இதற்கு அப்ளை செய்ய <
Similar News
News October 3, 2025
BREAKING: விஜய் கட்சிக்கு பெரும் பின்னடைவு

கரூர் துயர சம்பவம் தொடர்பான வழக்கில் N.ஆனந்த், CTR நிர்மல் குமாரின் முன்ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இதனையடுத்து, அவர்கள் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது. ஏற்கெனவே மா.செ., மதியழகன் கைதான நிலையில், ஆதவ் அர்ஜுனா மீதும் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கட்சியின் முக்கியத் தலைவர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டிருப்பது, தவெக தரப்புக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
News October 3, 2025
‘SORRY அம்மா.. நான் சாகப் போறேன்’

‘அம்மா, என்ன மன்னிச்சிரு. எனக்கு வாழ விருப்பமில்ல. அப்பா இறந்த பிறகு, தாத்தா ஒவ்வொரு வாரமும் சண்டை போடுறாரு. நிம்மதியா வாழ விடமாட்டேங்கிறாரு. தாத்தாவுக்கு தண்டனை கிடைக்கணும்.’ தெலங்கானாவில் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் சிறுமி அஞ்சலி(17) கடைசியாக எழுதிய வரிகள் இவை. தந்தைவழி தாத்தா தொடர்ந்து தகராறு செய்ததால் மன உளைச்சலில் அவர் விபரீத முடிவை எடுத்துள்ளார். இதுகுறித்து போலீஸ் விசாரித்து வருகிறது.
News October 3, 2025
நிலத்திலும் வாழும் மீன் எது தெரியுமா?

மட்ஸ்கிப்பர்கள் மீன்கள் நீரிலும், நிலத்திலும் வாழும் தன்மை கொண்டவை. இவை தனது Gills-களில் தண்ணீரை சேமித்து வைப்பதால், நிலத்தில் வாழும்போது தனது தோல், வாய் மூலம் சுவாசிக்க இதற்கு ஏதுவாக இருக்கிறது. இதன் உடல் அமைப்பு, நிலத்தில் ஊர்ந்து செல்லவும், தாவவும் உதவுகிறது. எனவே இந்த மீன்களால் நிலத்தில் 3 நாள்கள் முதல் பல வாரங்கள் வரை வாழும் என்கின்றனர். இந்த அதிசயத்தை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.