News October 3, 2025
கரூர் துயரம்: ஒரு வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி தொடரப்பட்ட மனுவை ஐகோர்ட் மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது. வழக்கு விசாரணை ஆரம்பகட்டத்தில் இருக்கும் நிலையில், எவ்வாறு சிபிஐ-க்கு மாற்ற முடியும்? நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க வேண்டாம் எனக்கூறிய நீதிபதிகள், சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்று தள்ளுபடி செய்தனர்.
Similar News
News October 3, 2025
ஆச்சரியங்கள் நிறைந்த நெதர்லாந்து!

சிறிய நாடான நெதர்லாந்து பற்றி ஆச்சரியமான விஷயங்கள் பல உள்ளன. இது ஐரோப்பாவின் மிகவும் தனித்துவமான இடங்களில் ஒன்றாக உள்ளது. புதுமையான மிதக்கும் வீடுகள் முதல் சைக்கிள் கலாச்சாரம் வரை ஆச்சரியங்களால் நிரம்பியுள்ளது. என்னென்ன ஆச்சரியங்கள், தனித்துவம் என்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. உங்களை ஆச்சரியப்பட வைத்தது எது? கமெண்ட்ல சொல்லுங்க.
News October 3, 2025
BREAKING: இந்திய அணி அபாரம்

வெ.இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்டின் 2-வது நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 286 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. முதல் இன்னிங்ஸில் WI 162 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆன நிலையில், IND 448/5 ரன்கள் குவித்துள்ளது. இதில் ராகுல், ஜுரெல், ஜடேஜா ஆகியோரின் சதங்களும் அடங்கும். தற்போது ரவீந்திர ஜடேஜா 104 ரன்களுடனும், வாஷிங்டன் சுந்தர் 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்த டெஸ்டில் இந்திய இன்னிங்ஸ் வெற்றி பெறுமா?
News October 3, 2025
ரோஹித்- கம்பீர் சாதனையை முந்திய KL ராகுல்!

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் சதமடித்து ஓப்பனர் KL ராகுல், பல சாதனைகளை படைத்துள்ளார். இந்த ஆண்டில் ஓப்பனராக அதிக ரன்களை குவித்தவர், இந்திய அணிக்கு அனைத்து வகை கிரிக்கெட்டையும் சேர்த்து 20 சதங்கள் என பட்டியல் நீண்டுவருகிறது. இவற்றுடன் சேர்த்து, டெஸ்டில் இந்திய அணிக்கு ஓப்பனராக 10 சதங்களை நிறைவு செய்து கம்பீர், ரோஹித் (தலா 9 சதங்கள்) ஆகியோரையும் முந்தியுள்ளார் KL ராகுல்.