News October 3, 2025
இன்ஸ்டகிராம் நம்மை ஒட்டுக்கேட்கிறதா?

ஒரு பொருளை பற்றி பேசிய சிறிது நேரத்தில் அது தொடர்பான விளம்பரத்தை இன்ஸ்டாவில் பார்க்கமுடியும். இதனால் இன்ஸ்டா நம்மை ஒட்டுக்கேட்கிறதா என்ற கேள்வி எழும். ஆனால் இன்ஸ்டா ஒட்டுக்கேட்பதில்லை என அதன் தலைவர் ஆடம் மறுத்துள்ளார். பிரவ்சிங் ஹிஸ்டரியை வைத்தே விளம்பரங்கள் வரும் எனவும் விளக்கமளித்துள்ளார். அதேபோல் உங்கள் நண்பர்களின் விருப்பங்களை வைத்தும் விளம்பரங்கள் வருமாம்.
Similar News
News October 3, 2025
இவர்தான் நம் ரோல்மாடல்!

100% பார்வை இழந்தவர் என்ற போதிலும், IFS தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் பெண் என்ற பெருமையுடன் பலருக்கும் முன்மாதிரியாக திகழ்கிறார் பினோ செபைன். சென்னையில் பிறந்த இவர், ஆங்கிலத்தில் Masters டிகிரி முடித்தவர். SBI வங்கியில் வேலை செய்து கொண்டே தனது UPSC கனவை துரத்தியவர், தனது விடாமுயற்சியால் 2014-ல் 2-வது முயற்சியிலேயே தேர்ச்சியடைந்தார். இவர்தான் நம் ரோல்மாடல்!
News October 3, 2025
BREAKING: தங்கம் விலையில் அதிரடி மாற்றம்

ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் 2 முறை மாற்றம் அடைவது வாடிக்கையாகி இருக்கிறது. இன்று காலையில் சவரனுக்கு ₹880 குறைந்ததால் மக்கள் சற்று நிம்மதி அடைந்தனர். இந்நிலையில், மாலையில் ₹480 அதிகரித்து அதிர்ச்சி கொடுத்துள்ளது. தற்போது, 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹10,900-க்கும் 1 சவரன் ₹87,200-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை தொடர்ந்து உச்சத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
News October 3, 2025
ஆதவ் மீது சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவு: ஐகோர்ட்

ஆதவ் அர்ஜுனா மீது தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க காவல்துறைக்கு மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அவரின் சமூகவலைதள பதிவுக்கு பின்னால் உள்ள பின்புலத்தை விசாரித்து நடவடிக்கை எடுக்க ஆணையிட்ட கோர்ட், ஆதவ்வின் பதிவுக்கு கண்டனங்களையும் தெரிவித்துள்ளது. நேபாளம், இலங்கை போன்று புரட்சி ஏற்படுவதே ஒரே வழி என ஆதவ் அர்ஜுனா பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.