News April 14, 2024
நாகை: மீன்பிடித்தடைக்காலம் அமல்

நாகை மாவட்டத்தில் மீன்பிடி தடைக்காலம் இன்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் வரும் ஜூன் மாதம் 14ஆம் தேதி வரை மொத்தம் 61 நாட்களுக்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கடலுக்குச் நாகை அக்கரைப்பேட்டை வேதாரணியம் பகுதியில் கடலுக்குச் சென்ற 80 சதவீத படகுகள் இன்று மாலை வரை கரையை திரும்பி உள்ளதாகவும், மீதமுள்ள படகுகள் இன்று நள்ளிரவுக்குப் கரை திரும்ப மீன்வளத்துறை அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
Similar News
News December 29, 2025
நாகை: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதே போன்று, A.26,B.26,C.26,D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar)
B – (Apr/May/Jun)
C – (Jul/Aug/Sep)
D – (Oct/Nov/Dec)
இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!
News December 29, 2025
நாகை: நாய்களுக்கு தடுப்பூசி

கீழ்வேளுர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சமீபத்தில் வெறிநாய் கடித்ததில் 15 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் உத்தரவின் பேரில், பேரூராட்சி பகுதியில் சுற்றி திரியும் நாய்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளில் செயல் அலுவலர் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
News December 29, 2025
நாகை: பைக் வாங்க அரசு மானியம்!

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும் அதில் Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!\


