News October 3, 2025
BREAKING: சற்றுநேரத்தில் விஜய் வழக்கில் உத்தரவு

கரூர் துயரச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை ஐகோர்ட் மதுரை கிளையில் தொடங்கியுள்ளது. விஜய் தரப்பும், தமிழக அரசு தரப்பும் காரசாரமாக வாதம் செய்து வருகின்றன. குறிப்பாக, கரூர் செல்ல விஜய்க்கு பாதுகாப்பு கோரி தொடரப்பட்ட மனுவில் முக்கிய உத்தரவு இன்னும் சற்றுநேரத்தில் வெளியாகவுள்ளது. இந்த உத்தரவை பொறுத்தே, விஜய் கரூர் செல்வாரா, இல்லையா என்பது குறித்து முடிவு தெரியும்.
Similar News
News October 3, 2025
BREAKING: தங்கம் விலையில் அதிரடி மாற்றம்

ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் 2 முறை மாற்றம் அடைவது வாடிக்கையாகி இருக்கிறது. இன்று காலையில் சவரனுக்கு ₹880 குறைந்ததால் மக்கள் சற்று நிம்மதி அடைந்தனர். இந்நிலையில், மாலையில் ₹480 அதிகரித்து அதிர்ச்சி கொடுத்துள்ளது. தற்போது, 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹10,900-க்கும் 1 சவரன் ₹87,200-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை தொடர்ந்து உச்சத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
News October 3, 2025
ஆதவ் மீது சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவு: ஐகோர்ட்

ஆதவ் அர்ஜுனா மீது தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க காவல்துறைக்கு மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அவரின் சமூகவலைதள பதிவுக்கு பின்னால் உள்ள பின்புலத்தை விசாரித்து நடவடிக்கை எடுக்க ஆணையிட்ட கோர்ட், ஆதவ்வின் பதிவுக்கு கண்டனங்களையும் தெரிவித்துள்ளது. நேபாளம், இலங்கை போன்று புரட்சி ஏற்படுவதே ஒரே வழி என ஆதவ் அர்ஜுனா பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
News October 3, 2025
திமுக – விசிக கூட்டணியில் முறிவா? திருமாவளவன்

கரூர் சம்பவத்தில் விஜய்க்கும், திமுகவுக்கும் டீலிங் உள்ளதா என திருமாவளவன் கேள்வி எழுப்பியது பெரும் சர்ச்சையானது. இதனால் திமுக – விசிக கூட்டணியில் விரிசல் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் தனது விமர்சனத்தில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை எனவும், திமுக – விசிக கூட்டணியில் முறிவு ஏற்படாது என்றும் திருமா விளக்கம் அளித்துள்ளார். கரூர் விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேடக்கூடாது எனவும் கூறியுள்ளார்.