News October 3, 2025
பெரம்பலூர்: குட்கா விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளில் நேற்று (அக்.2) போலீசார் நடத்திய சோதனையில், அரும்பாவூர் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அன்னமங்கலத்தைச் சேர்ந்த கணேசன் (67) என்பவர், அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை வைத்து விற்றது தெரியவந்தது. இந்த நிலையில், போலீசார் கணேசனை கைது செய்து, அவரிடமிருந்து 1.800 கி.கி எடையுள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.
Similar News
News October 3, 2025
பெரம்பலூர்: மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி

பெரம்பலூர் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாநில அளவிலான 14,17,19-வயதுக்கு உட்பட்ட ஆண் மற்றும் பெண்களுக்கான 6 பிரிவுகளாக டேபிள் டென்னிஸ் போட்டி பெரம்பலூர் எம்ஜிஆர் விளையாட்டு அரங்கத்தில் இன்று நடைபெற்றது. இந்த விளையாட்டுப் போட்டியில் 38 மாவட்டங்களைச் சார்ந்த 240க்கும் மேற்பட்டோர் பங்கேற்று விளையாடினர். இதில் வெற்றி பெறுபவர்கள் தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என கூறப்பட்டுள்ளது.
News October 3, 2025
பெரம்பலூர்: டிப்பர் லாரி மீது கார் மோதி விபத்து

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் அவரது மனைவி கவிதா, மூன்று மகன்களுடன், நேற்று திருச்சியில் உள்ள கோயிலில் சாமி கும்பிட்டு வீடு திரும்பி வரும் பொழுது, பெரம்பலூர் மாவட்டம், எறையூர் பகுதியில் லாரி பார்க்கிங்கில் நின்று கொண்டிருந்த டிப்பர் லாரி மீது சுரேஷ் ஓட்டி வந்த கார் மோதியது. இதில் இவர்கள் 5 பேரில் 4 பேருக்கு தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
News October 3, 2025
பெரம்பலூர்: நடு இரவில் மர்ம நபர்கள் துணிகரம்

அயன் பேரையூர், சமத்துவபுரத்தில் வசிப்பவர் ராஜேந்திரன் மனைவி ஜெயலட்சுமி (48) இவர் குடும்பத்தோடு நேற்று முன்தினம் இரவு காற்று வரவில்லை என்று கதவை திறந்து வைத்து உறங்கியுள்ளனர். அப்போது மர்ம நபர்கள் வீட்டிற்குள் நுழைந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த மூன்றரை பவுன் நகை மற்றும் ரூ.30,000-ஐ திருடி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நேற்று வி.களத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.