News October 3, 2025

கரூர் துயரம்: கோர்ட் விசாரணை தொடங்கியது

image

கரூர் சம்பவம் தொடர்பான 9 வழக்குகளின் விசாரணை தொடங்கியுள்ளது. மதுரை HC-ல் அரசியல் கட்சி கூட்டங்களுக்கு புதிய விதிகளை வகுக்க கோரிய மனு, N.ஆனந்த் மற்றும் நிர்மல்குமார் ஆகியோரின் முன்ஜாமின், வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிய மனு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் இழப்பீடு தொகையை உயர்த்த கோரிய மனு, தவெகவிற்கு தடை கோரிய மனு உள்ளிட்ட மனுக்களின் விசாரணை சற்றுமுன் தொடங்கியது.

Similar News

News October 3, 2025

BREAKING: விஜய்யை விளாசிய நீதிபதி

image

கரூர் துயர சம்பவம் தொடர்பான வழக்கில் தவெக தலைவர் விஜய்க்கு தலைமை பண்பே இல்லை என ஐகோர்ட் ஜட்ஜ் செந்தில்குமார் சாடியுள்ளார். கரூரில் நடந்தது MAN MADE DISASTER எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். துயர சம்பவம் நடந்ததும் பரப்புரை ஏற்பாட்டாளர்கள், தலைவர் என அனைவரும் தொண்டர்களையும் அவர்களை பின்தொடர்பவர்களையும் கைவிட்டுவிட்டு மறைந்துவிட்டனர் என்றும் ஜட்ஜ் காட்டமாக கூறியுள்ளார்.

News October 3, 2025

BREAKING: IG அஸ்ரா கர்க் தலைமையில் SIT அமைப்பு

image

கரூர் துயர சம்பவத்தில், வடக்கு மண்டல IG அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு(SIT) அமைத்து மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கரூர் SP-யுடன் கூடுதலாக ஒருவரை இணைத்து இந்த சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. வழக்கு ஆவணங்களை சிறப்பு புலனாய்வு குழுவிடம் உடனடியாக ஒப்படைக்கவும் கரூர் போலீசாருக்கு ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது.

News October 3, 2025

அணில்களுக்கு அறிவில்லை: ஓவியா பதிலடி

image

ARREST VIJAY என <<17852904>>ஓவியா ஸ்டோரி<<>> வைத்ததால் அவரை தகாத வார்த்தைகளால் திட்டித்தீர்த்தனர் விஜய் ரசிகர்கள். இதனால் கடுப்பான ஓவியா மீண்டும் ஒரு ஸ்டோரியை வைத்து, டெலீட் செய்துள்ளார். அணில்களுக்கு அறிவில்லை என்பது போல ஒரு போட்டோவை அவர் பகிர்ந்ததால் மீண்டும் அவரை தாக்கிவருகின்றனர் விஜய் ரசிகர்கள். இந்நிலையில், ஓவியாவை தகாத வார்த்தைகளில் திட்டுவது சரியா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

error: Content is protected !!