News October 3, 2025
BREAKING: அடுத்தடுத்து கட்சி பதவியை பறிக்கும் இபிஎஸ்

செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், அவரின் ஆதரவாளர்களுக்கு எதிரான நடவடிக்கையை EPS தீவிரப்படுத்தியுள்ளார். அந்த வகையில், செங்கோட்டையன் ஆதரவாளர்களை கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கியதுடன், ஏ.கே.செல்வராஜ் ஆதரவாளர்கள் 35 பேருக்கு பொறுப்புகளை வழங்கியுள்ளார். கட்சியில் செங்கோட்டையன் ஆதரவு வட்டத்தை குறைக்கும் வகையில், தற்போது இந்த மாற்றங்களை EPS செய்திருக்கிறார்.
Similar News
News October 3, 2025
BREAKING: IG அஸ்ரா கர்க் தலைமையில் SIT அமைப்பு

கரூர் துயர சம்பவத்தில், வடக்கு மண்டல IG அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு(SIT) அமைத்து மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கரூர் SP-யுடன் கூடுதலாக ஒருவரை இணைத்து இந்த சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. வழக்கு ஆவணங்களை சிறப்பு புலனாய்வு குழுவிடம் உடனடியாக ஒப்படைக்கவும் கரூர் போலீசாருக்கு ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது.
News October 3, 2025
அணில்களுக்கு அறிவில்லை: ஓவியா பதிலடி

ARREST VIJAY என <<17852904>>ஓவியா ஸ்டோரி<<>> வைத்ததால் அவரை தகாத வார்த்தைகளால் திட்டித்தீர்த்தனர் விஜய் ரசிகர்கள். இதனால் கடுப்பான ஓவியா மீண்டும் ஒரு ஸ்டோரியை வைத்து, டெலீட் செய்துள்ளார். அணில்களுக்கு அறிவில்லை என்பது போல ஒரு போட்டோவை அவர் பகிர்ந்ததால் மீண்டும் அவரை தாக்கிவருகின்றனர் விஜய் ரசிகர்கள். இந்நிலையில், ஓவியாவை தகாத வார்த்தைகளில் திட்டுவது சரியா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.
News October 3, 2025
சோறு வடித்த கஞ்சியில் உள்ள நன்மைகள்

சோறு வடித்த கஞ்சியின் நன்மைகள் தெரிந்தால், அதை இனிமே கீழே ஊத்தமாட்டீங்க. *உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் இதை கட்டாயம் குடிக்க வேண்டும். *இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் குடல் இயக்கம் சீராகி மலச்சிக்கல் தடுக்கப்படுகிறது. *சோறு வடித்த கஞ்சி உடல் உஷ்ணத்தை குறைக்கும். *இதில் வைட்டமின்கள் பி1, பி2,பி6, ஈ ஆகியவை உள்ளன. *தினமும் 1 டம்ளர் கஞ்சியை குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது.