News October 3, 2025
கரூர் மீது பாஜகவுக்கு என்ன அக்கறை: CM ஸ்டாலின்

கலவரத்துக்குப் பிறகு மணிப்பூருக்கு செல்லாத பாஜக அமைச்சர் கரூருக்கு மட்டும் உடனடியாக வந்தது ஏன் என CM ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். BJP MP-க்கள் தமிழ்நாட்டின் மீது உள்ள அக்கறையில் கரூருக்கு வரவில்லை என்றும் எதையாவது வைத்து தேர்தல் நேரத்தில் அரசியல் செய்ய முடியுமா என்ற நோக்கத்துடனே வந்ததாகவும் விமர்சித்துள்ளார். மற்றவர்களின் ரத்தத்தை உறிஞ்சும் ஒட்டுண்ணியாக BJP இருப்பதாகவும் CM சாடினார்.
Similar News
News October 3, 2025
அணில்களுக்கு அறிவில்லை: ஓவியா பதிலடி

ARREST VIJAY என <<17852904>>ஓவியா ஸ்டோரி<<>> வைத்ததால் அவரை தகாத வார்த்தைகளால் திட்டித்தீர்த்தனர் விஜய் ரசிகர்கள். இதனால் கடுப்பான ஓவியா மீண்டும் ஒரு ஸ்டோரியை வைத்து, டெலீட் செய்துள்ளார். அணில்களுக்கு அறிவில்லை என்பது போல ஒரு போட்டோவை அவர் பகிர்ந்ததால் மீண்டும் அவரை தாக்கிவருகின்றனர் விஜய் ரசிகர்கள். இந்நிலையில், ஓவியாவை தகாத வார்த்தைகளில் திட்டுவது சரியா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.
News October 3, 2025
சோறு வடித்த கஞ்சியில் உள்ள நன்மைகள்

சோறு வடித்த கஞ்சியின் நன்மைகள் தெரிந்தால், அதை இனிமே கீழே ஊத்தமாட்டீங்க. *உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் இதை கட்டாயம் குடிக்க வேண்டும். *இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் குடல் இயக்கம் சீராகி மலச்சிக்கல் தடுக்கப்படுகிறது. *சோறு வடித்த கஞ்சி உடல் உஷ்ணத்தை குறைக்கும். *இதில் வைட்டமின்கள் பி1, பி2,பி6, ஈ ஆகியவை உள்ளன. *தினமும் 1 டம்ளர் கஞ்சியை குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது.
News October 3, 2025
3 மணி நேரத்தில் பணம் டெபாசிட்.. புதிய அறிவிப்பு

காசோலைகளை பணமாக்க தற்போது 2 நாள்கள் வரை ஆகிறது. இந்நிலையில், 3 மணி நேரத்தில் காசோலையை பணமாக்கும் முறையை RBI கொண்டு வந்துள்ளது. முதல் கட்டமாக, காசோலையை ஒரே நாளில் பணமாக்கும் முறை வங்கிகளில் நாளை முதல் (அக்.4) அமலுக்கு வருகிறது. மேலும், 2026 ஜனவரி 3 முதல் மூன்று மணிநேரத்தில் பணமாக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தனிநபர்கள், வர்த்தக நிறுவனங்கள் சிரமத்தை தவிர்க்க முடியும். SHARE IT.