News April 14, 2024
கமல்ஹாசனுடன் பிரபல இயக்குநர் சந்திப்பு

பிரபல இயக்குநர் அல்போன்சோ குரோனுடனான சந்திப்பின்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை நடிகர் கமல்ஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அல்போன்சோ குரோன் ஒரு மெக்சிகன் இயக்குநர் ஆவார். இவர் 5 ஆஸ்கர், 7 பாஃப்டா, 3 கோல்டன் குளோப் விருதுகளை வென்றவர். கமல் பகிர்ந்த புகைப்படங்களில் ஏ.ஆர்.ரஹ்மான், மணிரத்னம், சித்தார்த், அதிதி ராவ் உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர்.
Similar News
News November 9, 2025
திரில் வேணுமா? இதை டிரை பண்ணுங்க!

சுவாரஸ்யமான மற்றும் சவாலான பயணங்கள் செய்ய ஆசையா? மனதை உற்சாகப்படுத்தும் டிரெக்கிங் பயணங்களை ட்ரை பண்ணுங்க. நேரம், தூரம், பாதை எல்லாம் சவாலாக இருக்கும். சிரமம் கூட சாகசமாக மாறும். நீங்க, உங்க நண்பர்களுடன் சேர்ந்து சாகசம் செய்ய, சில மலையேற்றங்களை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதை SHARE பண்ணுங்க.
News November 9, 2025
வாக்கு திருட்டை மூடி மறைக்கவே SIR: ராகுல் காந்தி

வாக்கு திருட்டை மூடி மறைக்கவும், அதை நிறுவனமயப்படுத்தவும் தான் SIR பணிகள் நடைபெறுவதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். ம.பி.,யில் பேட்டியளித்த அவர், ஹரியானா, பிஹார் போன்று மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, சத்தீஸ்கரிலும் இது நடந்துள்ளதாக நம்புவதாக கூறினார். வாக்கு திருட்டு தொடர்பாக தன்னிடம் விரிவான தகவல்கள் உள்ளதாக தெரிவித்த ராகுல், அதை படிப்படியாக வெளியிடுவோம் என்று குறிப்பிட்டார்.
News November 9, 2025
நாளை முதல் அனைத்து பள்ளிகளுக்கும் அறிவிப்பு

முறையாக பள்ளிக்கு வரும் +2 மாணவர்களுக்கு மட்டுமே பொதுத்தேர்வு எழுத <<18239237>>ஹால் டிக்கெட்<<>> வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. மேலும், பொதுத்தேர்வு குறித்த மாணவர்களின் அச்சத்தை போக்க ஆலோசனைகள் வழங்கப்படும் என்றும், தேர்ச்சி பெற முடியாதோ என நினைக்கும் மாணவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் பள்ளிகளில் அதற்கான பணி தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


