News October 3, 2025
சற்றுமுன்: ஒரே நாளில் விலை ₹3000 குறைந்தது

ஆபரணத் தங்கத்தை தொடர்ந்து, வெள்ளி விலையும் குறைந்துள்ளது. வரலாறு காணாத உச்சத்தில் இருந்த வெள்ளி விலை இன்று ஒரே நாளில் 1 கிராம் ₹3 குறைந்து ₹161-க்கும், கிலோ வெள்ளி ₹3000 குறைந்து ₹1,61,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வரும் நாள்களில் விலை மேலும் குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Similar News
News October 3, 2025
பாகிஸ்தானின் 5 போர் விமானங்களை அழித்தோம்

Op Sindoor-ல் பாகிஸ்தானின் 4-5 போர் விமானங்களை வீழ்த்தியதாக இந்திய விமானப்படை (IAF) தலைமை தளபதி அமர்பிரீத் சிங் தெரிவித்துள்ளார். இதில் அமெரிக்க தயாரிப்பான F-16, சீன தயாரிப்பான JF 17 ரக விமானங்கள் அடங்கும். இந்திய விமானங்களை வீழ்த்தியதாக PAK சொல்வது கட்டுக்கதை என்ற அவர், அந்நாட்டின் போர் விமானங்களை மட்டுமின்றி, ரேடார்கள், கட்டுப்பாட்டு மையங்களையும் கூட துவம்சம் செய்ததாக கூறியுள்ளார்.
News October 3, 2025
சற்றுமுன்: அறிவித்தார் விஜய்

தவெகவின் முக்கியத் தலைவர்களான N.ஆனந்த், CTR நிர்மல் குமார் தலைமறைவாகியுள்ள நிலையில், விஜய் <<17903527>>புதிய அறிவிப்பை<<>> வெளியிட்டுள்ளார். கட்சிப் பணிகள் தொய்வின்றி தொடர 20 பேர் கொண்ட குழுவை நியமித்து அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும், மா.செ.,-க்களிடம் பேசிய அவர், கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை, தான் விரைவில் சந்திக்க வேண்டும், அதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள் என அறிவுறுத்தியுள்ளார்.
News October 3, 2025
தடியடி நடத்தியதே கூட்ட நெரிசலுக்கு காரணம்: தவெக

போலீசார் எவ்வித எச்சரிக்கையும் கொடுக்காமல் தடியடி நடத்தியதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது என N.ஆனந்த், நிர்மல்குமாரின் ஜாமின் மனு விசாரணையின் போது தவெக தரப்பு குற்றம்சாட்டியது. சிலர் கூட்டத்தில் செருப்பு, ரசாயனங்களை எறிந்தனர். விபத்துகளை விபத்துகளாக பார்க்க வேண்டுமே தவிர, பொ.செயலாளர் மீது எப்படி வழக்குப்பதிவு செய்ய முடியும். கூட்டத்தை கட்டுப்படுத்தும் பொறுப்பு அரசிற்கே உள்ளதாகவும் கூறியுள்ளது.