News October 3, 2025

மீண்டும் பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு: 9 பேர் பலி

image

பாகிஸ்தானின் பெஷாவரில் நடந்த குண்டுவெடிப்பில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 4 சட்ட அமலாக்க அதிகாரிகள் படுகாயங்களுடன் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீசாரின் வாகனம் சென்ற பாதையில் திட்டமிடப்பட்டு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. கடந்த செப்., 30-ம் தேதி குவெட்டாவில் நடந்த <<17875660>>வெடிகுண்டு விபத்தில்<<>> 10 பேர் உயிரிழந்திருந்தனர்.

Similar News

News October 3, 2025

கரூர் துயரத்திற்கு CM ஸ்டாலின் தான் பொறுப்பு: NDA குழு

image

கரூர் துயரத்திற்கு CM ஸ்டாலினே முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும் என NDA குழு தெரிவித்துள்ளது. CM-க்கு NDA குழு அனுப்பிய கடித்ததில், தடுப்பு நடவடிக்கைகள் இருந்தபோதிலும் நெரிசல் ஏற்பட காரணம் என்ன? நெரிசலுக்கு வழிவகுத்த முதன்மைக் காரணிகள் குறித்த அறிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சமர்ப்பிக்க அறிவுறுத்தியுள்ளது. இந்த விஷயத்தில் உரிய நேரத்திற்குள் CM-ன் பதிலை எதிர்பார்ப்பதாகவும் NDA குழு கூறியுள்ளது.

News October 3, 2025

BREAKING: விஜய் முக்கிய அறிவிப்பு

image

தவெக வழக்கில் ஐகோர்ட் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்த நிலையில், கட்சியினருக்கு விஜய் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கட்சியின் மா.செ.,-க்களிடம் வாட்ஸ்ஆப் காலில் பேசிய அவர், கரூர் துயரத்தால் துவண்டுவிட வேண்டாம், புதிய உத்வேகத்துடன் பணியாற்றுங்கள் என அறிவுறுத்தியுள்ளார். மேலும், தவெகவுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவிடுவோர் மீது வழக்கு பதிந்தால் சட்ட உதவிகளை வழங்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

News October 3, 2025

மீண்டும் Kill Bill..

image

உலக சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் ‘Kill Bill’ படம் டிசம்பர் 5-ம் தேதி ரீ-ரிலிஸாகவுள்ளது. Quentin Tarantino இயக்கத்தில் 2 பாகங்களாக வெளிவந்த படங்களை ஒன்றிணைத்து, ‘Kill Bill: The Whole Bloody Affair’ என்ற பெயரில், புதிதாக ஏழரை நிமிட அனிமேஷன் சண்டை காட்சியை இணைத்து வெளியிடுகின்றனர். US-வில் மட்டும் வெளியாகவுள்ள படத்தை, இந்தியாவிலும் வெளியிட ரசிகர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

error: Content is protected !!