News October 3, 2025
காழ்ப்புணர்ச்சியுடன் பேசும் கவர்னர்: வைகோ

திமுக அரசின் மீது, கவர்னர் RN ரவி காழ்ப்புணர்ச்சியுடன் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என <<17900119>>கவர்னர் விமர்சிந்திருந்த <<>>நிலையில் அதற்கு வைகோ பதிலடி கொடுத்துள்ளார். பழங்குடியினர், பட்டியலின மக்களின் முன்னேற்றத்துக்காக பல திட்டங்களை திமுக அரசு முன்னெடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Similar News
News October 3, 2025
BREAKING: விஜய் முக்கிய அறிவிப்பு

தவெக வழக்கில் ஐகோர்ட் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்த நிலையில், கட்சியினருக்கு விஜய் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கட்சியின் மா.செ.,-க்களிடம் வாட்ஸ்ஆப் காலில் பேசிய அவர், கரூர் துயரத்தால் துவண்டுவிட வேண்டாம், புதிய உத்வேகத்துடன் பணியாற்றுங்கள் என அறிவுறுத்தியுள்ளார். மேலும், தவெகவுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவிடுவோர் மீது வழக்கு பதிந்தால் சட்ட உதவிகளை வழங்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
News October 3, 2025
மீண்டும் Kill Bill..

உலக சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் ‘Kill Bill’ படம் டிசம்பர் 5-ம் தேதி ரீ-ரிலிஸாகவுள்ளது. Quentin Tarantino இயக்கத்தில் 2 பாகங்களாக வெளிவந்த படங்களை ஒன்றிணைத்து, ‘Kill Bill: The Whole Bloody Affair’ என்ற பெயரில், புதிதாக ஏழரை நிமிட அனிமேஷன் சண்டை காட்சியை இணைத்து வெளியிடுகின்றனர். US-வில் மட்டும் வெளியாகவுள்ள படத்தை, இந்தியாவிலும் வெளியிட ரசிகர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
News October 3, 2025
கோபத்தை குறைங்க பாஸு!

சின்ன சின்ன விஷயங்களுக்கும் கோபப்படுபவர்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுவது மட்டுமின்றி, அவர்கள் உடலுக்கு பல பிரச்னைகள் வரும் என கூறப்படுகிறது. சில நிமிட கோபம் கூட உடலின் நோயெதிர்ப்பு சக்திக்கு முக்கியமான Salivary Immunoglobulin A (sIgA) சுரப்பதை குறைக்குமாம். இதன் காரணமாக, அடுத்த 4- 5 மணிநேரம் வரை உடல் மிகவும் பலவீனமாக இருக்குமாம். எனவே, கொஞ்சம் கோபத்தை குறைங்க பாஸு!