News April 14, 2024
அதிமுகவை விமர்சிப்பவர்கள் காணாமல் போவார்கள்

அதிமுகவைப் பற்றி அவதூறாகப் பேசுபவர்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விடுவார்கள் என எடப்பாடி பழனிசாமி எச்சரித்துள்ளார். ஆத்தூர் பிரசாரத்தில் பேசிய அவர், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை கட்ட, நாடாளுமன்றத்தில் திமுக MP-க்கள் குரல் கொடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டினார். மேலும், விளம்பரம் தேவை என்பதற்காக, ஒற்றை செங்கலுடன் உதயநிதி ஸ்டாலின் ஊர் ஊராக சுற்றி வருவதாகவும் அவர் கடுமையாக விமர்சித்தார்.
Similar News
News July 6, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இறைமாட்சி ▶குறள் எண்: 388 ▶குறள்: முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும். ▶பொருள்: நீதிநெறியுடன் அரசு நடத்தி, மக்களைக் காப்பாற்றும் ஆட்சியாளன்தான் மக்களுக்குத் தலைவன் எனப் போற்றப்படுவான்.
News July 6, 2025
ஹீரோவாகும் இயக்குநர்கள்.. ரசிகர்கள் கவலை..!

பார்த்திபன், சேரன், சுந்தர் சி, சசிகுமார் என தமிழ் சினிமா இயக்குநர்கள் ஹீரோவாவது புதிய விசயமல்ல. ஆனால் நல்ல திரைப்படங்களை கொடுத்துக் கொண்டிருந்த அவர்கள் அதன்பிறகு இயக்கத்தில் பெரிய வெற்றி பெறவில்லை. நடிகர்களாகிவிட்ட பின் மீண்டும் அவர்களிடமிருந்து அப்படிப்பட்ட படங்கள் எப்போது வரும் என ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். சேரன், GVM, சசிகுமார் உள்ளிட்ட இயக்குநர்களை ரொம்ப மிஸ் பண்றோம் இல்லையா?
News July 6, 2025
430 ரன்கள்: டீம் ஸ்கோர் இல்லை, கில் ஸ்கோர்..!

இந்தியா – இங்கி., இடையே 2வது டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில் இரண்டு இன்னிங்ஸையும் சேர்த்து 430 ரன்கள் அடித்துள்ளார். SENA நாடுகளுக்கு சென்று ஒரு ஆசிய கேப்டன் ஒரே போட்டியில் இவ்வளவு ரன்கள் அடித்தது இதுதான் முதல்முறை. மேலும் இந்தியாவுக்காக ஒரே போட்டியில் அதிக ரன்கள் எடுத்தவரும் தற்போது இவர் தான். கவாஸ்கர்(344), விவிஎஸ் லக்ஷம்ன்(340), சவுரவ் கங்குலி (330) என அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.