News October 3, 2025
BREAKING: சென்னையில் பெண்ணை கடித்து குதறிய நாய்

சென்னை, அபிராமபுரத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்ணை குமார் என்பவரின் வளர்ப்பு நாய் கடித்தது. நாய் கடித்ததில் வீட்டு வேலை செய்யும் பெண் தொழிலாளி உஷா(45) என்பவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் தொடர்ந்து நாய்கடி சம்பவம் அதிகரித்து வருவதால், அப்பகுதியில் உள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
Similar News
News October 3, 2025
மெரினாவில் ஜிக்காட்டம்! மிஸ் பண்ணிடாதீங்க

சென்னை மெரினா கடற்கரையில் வரும் அக்.5-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் ஜிக்காட்டம் நடைபெற உள்ளது. தமிழர் ஆட்டக்கலைகளுள் ஜிக்காட்டமும் ஒன்றாகும். இந்த ஆட்டத்தை குறைந்தபட்சம் மூன்று பேர் முதல் எட்டு பேர் ஆடுகின்றனர். இந்த ஆட்டத்தை நீங்கள் மெரினாவில் காணலாம். (ஷேர் பண்ணுங்க)
News October 3, 2025
சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை விமான நிலைய மேலாளர் அலுவலகத்திற்கு இ-மெயில் ஒன்று வந்தது. அதில் சென்னை விமான நிலையத்தில் உள்ள குப்பைத் தொட்டிகளில், வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன. சிறிது நேரத்தில், வெடித்து சிதறும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனையடுத்து மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர். பின், அது புரளி என தெரியவந்தது.
News October 3, 2025
சென்னை: ரூ.20,000 மானியத்தில் இ-ஸ்கூட்டர் வேண்டுமா?

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். 3)அதில் Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 4) பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். 5)விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். (SHARE பண்ணுங்க)