News October 3, 2025
CM ஸ்டாலின் வரலாற்றை மறக்கக்கூடாது: வானதி

கலைஞர் நாணயத்தை வெளியிட்டவர்களும் RSS-ஐ சேர்ந்தவர்கள் என்பதை CM ஸ்டாலின் உணர வேண்டும் என வானதி சீனிவாசன் கூறியுள்ளார். RSS நாணையத்தை PM மோடி வெளியிட்டதை CM ஸ்டாலின் சாடியிருந்தார். அதற்கு பதிலளித்த வானதி, தனது கொள்கைகளுக்கு RSS செயல் வடிவம் கொடுத்துள்ளது என காந்தியே பாராட்டியிருக்கிறார் என குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த வரலாற்றை CM-க்கு நினைவூட்ட விரும்புகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 3, 2025
கோபத்தை குறைங்க பாஸு!

சின்ன சின்ன விஷயங்களுக்கும் கோபப்படுபவர்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுவது மட்டுமின்றி, அவர்கள் உடலுக்கு பல பிரச்னைகள் வரும் என கூறப்படுகிறது. சில நிமிட கோபம் கூட உடலின் நோயெதிர்ப்பு சக்திக்கு முக்கியமான Salivary Immunoglobulin A (sIgA) சுரப்பதை குறைக்குமாம். இதன் காரணமாக, அடுத்த 4- 5 மணிநேரம் வரை உடல் மிகவும் பலவீனமாக இருக்குமாம். எனவே, கொஞ்சம் கோபத்தை குறைங்க பாஸு!
News October 3, 2025
BREAKING: கனமழை வெளுத்து வாங்கும்

தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என IMD கணித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், நாமக்கல், அரியலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என IMD தெரிவித்துள்ளது. எனவே, மேற்கண்ட மாவட்டங்களில் வசிப்போர் வெளியே செல்லும் போது குடை எடுத்துச் செல்லவும்.
News October 3, 2025
மாதம் ₹7,000.. உடனே அப்ளை பண்ணுங்க!

மத்திய அரசின் எல்ஐசி பீமா சகி யோஜனா திட்டம், கிராமப்புற பகுதிகளில் உள்ள 18-70 வயதுடைய பெண்களுக்கு எல்ஐசி முகவர்களாக பணியாற்றுவதற்கான பயிற்சி மற்றும் மாதந்தோறும் ₹7,000 உதவித்தொகை வழங்குகிறது. உதவித்தொகையோடு அளிக்கப்படும் 3 ஆண்டு பயிற்சியை முடித்தால், எல்ஐசி முகவர்களாக பணியாற்றலாம். இதற்கு அப்ளை செய்ய <