News October 3, 2025
ஆப்கான் அமைச்சரின் இந்திய பயணத்துக்கு UN அனுமதி

ஆப்கான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தகி அக்.9 – 16 வரை இந்தியாவில் பயணம் மேற்கொள்கிறார். இந்நிலையில், இதற்கு ஐநா சபை அனுமதி வழங்கியுள்ளது. UN கவுன்சில் 1988 (2011) தீர்மானத்தின்படி, தலிபான்களுடன் தொடர்பிலுள்ள ஒருவர் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள தடை விதிக்கப்படுகிறது. இருப்பினும், அரசு பயணம் (அ) மருத்துவ காரணங்களுக்காக விதிவிலக்கு அளிக்கப்படுகிறது.
Similar News
News October 3, 2025
ஜூனியர் NTR உடன் இணைகிறாரா சிம்பு?

பெரும் ஹைப்புடன் ஜூனியர் NTR நடிப்பில் வெளியான ‘தேவரா’ படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஆனாலும் ஓரளவுக்கு நல்ல வசூல் படத்துக்கு கிடைத்ததாக கூறப்படுகிறது. இதனால் ‘தேவாரா 2’ எடுக்கும் முயற்சியில் இயக்குநர் கொரட்டலா சிவா ஈடுபட்டுள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சிம்பு நடிக்க பேச்சுவார்த்தை நடந்துள்ளதாம். ஜான்வி கபூருடன் சேர்ந்து மேலும் ஒரு நடிகையும் இந்த படத்தில் நடிக்க உள்ளாராம்.
News October 3, 2025
பணம் வந்திருச்சு.. வாழ்க்கை போயிருச்சு!

சேமித்தால் பிற்காலத்தில் நிம்மதியாக வாழலாம் என நம்பியவர், ₹4 கோடி சேர்த்தாலும், நிம்மதி இன்றி தவிக்கிறார். ஜப்பானை சேர்ந்த சூசுகி(67), வாழ்வில் ஒன்றுமே அனுபவிக்கவில்லை. தற்போது மனைவி இறந்துவிட, அவருடன் நல்ல ஹோட்டலுக்கு கூட போனதில்லை என வருந்துகிறார். பிள்ளையுடன் அவருக்கு சந்தோஷமான நினைவுகளே இல்லையாம். சிக்கனமாக இருந்து வாழ்க்கையை தொலைத்ததாக புலம்புகிறார். இந்த விஷயத்தில் நீங்க என்ன சொல்றீங்க?
News October 3, 2025
தவெக மாவட்ட செயலாளருக்கு ஜாமின் மறுப்பு

தவெக நாமக்கல் மாவட்ட செயலாளர் சதீஷ்குமாருக்கு முன்ஜாமின் மறுக்கப்பட்டுள்ளது. நாமக்கல் தனியார் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், கட்சியினரை கட்டுப்படுத்த தெரியாதா என்றும் பொறுப்புடன் செயல்பட வேண்டாமா எனவும் மா.செ., சதீஷ்குமாருக்கு மெட்ராஸ் HC கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், தவெகவினர் செயல்பாடுகளால் ₹5 லட்சம் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.