News October 3, 2025
IND கிரிக்கெட் அணியின் செயல் மூன்றாம் தரம்: பசித் அலி

இந்திய கிரிக்கெட் அணி No 1 ஆக உள்ளது, ஆனால் அவர்களது செயல் மூன்றாம் தரமாக உள்ளதாக முன்னாள் பாக்., வீரர் பசித் அலி கூறியுள்ளார். ஆசிய கோப்பை டிராபியை நக்வியிடம் இருந்து இந்தியா வாங்க மறுத்ததை சுட்டிக்காட்டி பேசிய அவர், ஒருவேளை ஆசியக் கோப்பை தொடரை ICC நடத்தி, அதில் பாக்., வென்ற பின்னர் ஜெய் ஷா கைகளால் வாங்க மாட்டோம் என்று சொன்னாலும் அது தவறானது என்றார்.
Similar News
News October 3, 2025
டெல்லிக்கு வர MP-க்களுக்கு அழைப்பு!

நாடாளுமன்ற மாநிலங்களவை அனைத்து கட்சி கூட்டம் அக்.7-ம் தேதி நடைபெறவுள்ளது. நவம்பர், டிசம்பர் மாதங்களில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடக்கவுள்ளதால், அது குறித்து ஆலோசனை நடத்த தலைநகரில் அனைத்து கட்சி MP-க்களின் பிரதிநிதிகள் கூடுகின்றனர். மாநிலங்களவை தலைவர்
சி.பி.ராதாகிருஷ்ணனின் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில், GST, USA வரி விவகாரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படலாம்.
News October 3, 2025
பூமியில் உதித்த தேவதைகளின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

ஒன்றா இரண்டா.. வார்த்தைகள் போதாது இந்த தேவைகளின் அழகை வர்ணிக்க. தசரா, விஜயதசமியை முன்னிட்டு கலர்புல் போட்டோஷுட் நடத்திய ஹீரோயின்கள், அவற்றை இன்ஸ்டாவில் பதிவிட்டு ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைத்துள்ளனர். இதை பார்த்து ரசிகர்கள், இப்படி நீங்கள் போட்டோக்கள் போட்டால், வருஷம் முழுக்க பண்டிகை கொண்டாடலாமே என கமெண்ட் செய்கின்றனர்.
News October 3, 2025
கரூர் விவகாரத்தில் விஜய் செய்தது தவறு: சீமான்

கரூர் விவகாரத்தில் விஜய்க்கும், திமுகவுக்கும் டீலிங் இருக்கா என்று திருமா கேட்டதில் உண்மை இருக்கலாம் என சீமான் தெரிவித்துள்ளார். விரைவில் தேர்தல் வர உள்ளதாலேயே கரூர் விவகாரத்தில் அரசியல் கட்சிகள் ஆர்வம் காட்டுவதாகவும் குற்றம்சாட்டினார். விஜய்க்காகவே மக்கள் கூடிய நிலையில் உயிரிழப்புகளுக்கு அவர் பொறுப்பேற்றிருக்க வேண்டும் என்றும், ஆனால் விஜய் வருத்தம் கூட தெரிவிக்கவில்லை என சாடினார்.