News April 14, 2024
சரக்கு ரயில் தடம் புரண்டது

ஜோலார்பேட்டையை அடுத்த சோமநாயக்கன்பட்டி அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. சென்னையில் இருந்து பெங்களூரு சென்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் 14ஆவது பெட்டி தடம் புரண்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதன் காரணமாக திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் வாணியம்பாடியில் நிறுத்தப்பட்டுள்ளது. தடம் புரண்ட ரயிலை மீட்க ரயில்வே ஊழியர்கள் போராடி வருகின்றனர்.
Similar News
News February 11, 2026
அறிவித்தார் ஈரோடு கலெக்டர்!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் “இருவார கோழி கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம்” வரும் 14/02/2026 வரை நடைபெற உள்ளது. எனவே மக்கள் அருகாமையில் உள்ள கால்நடை மருத்துவமனையில் உங்கள் கோழிகளை 3 மாதங்களுக்கு ஒருமுறையும், அதிகபட்சமாக 6 மாதத்திற்குள்ளும் தடுப்பூசி செலுத்தி பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி,தெரிவித்துள்ளார்.
News February 11, 2026
கோவை, திருப்பூரில் 50% ஜவுளி உற்பத்தி நிறுத்தம்

கோவை, திருப்பூரில் இன்று முதல் 50% ஜவுளி உற்பத்தி நிறுத்தப்படுவதாக ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் அறிவித்துள்ளார். கடந்த 3 வாரமாக நூல் விலை கிலோவுக்கு 20% உயர்ந்துள்ளது. நூல் விலை உயர்வால் விற்பனை சரிந்து ₹100 கோடி மதிப்புள்ள துணிகள் தேக்கமடைந்துள்ளன. மேலும் தேக்கம் அதிகரிக்கும் என்பதால், 50% ஜவுளி உற்பத்தி நிறுத்தப்படுவதாகவும் அறிவித்துள்ளார்.
News February 11, 2026
விஜய் வருகையால் பயத்தில் திமுக: தங்கமணி

சிறுபான்மையினர் வாக்கு தவெகவிற்கு சென்றுவிடுமோ என்ற பயத்தில் திருப்பரங்குன்றம் மலையில் தீபமேற்றும் விவகாரத்தில் கூட திமுக அரசியல் செய்வதாக தங்கமணி விமர்சித்துள்ளார். தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய DMK அரசு தவறிவிட்டது. இதையெல்லாம் மனதில் வைத்து வரும் தேர்தலில் ADMK கூட்டணியை வெற்றிபெற செய்ய வேண்டும். அப்போதுதான் பெண்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்; தமிழகமும் வளர்ச்சி அடையும் என்றார்.


