News October 3, 2025

விருதுநகர்: போலீஸ் ஸ்டேஷனில் தவறி விழந்த காவலர் உயிரிழப்பு!

image

துலுக்கபட்டியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(43). இவர் நத்தம்பட்டி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். கடந்த மாதம் 22ம் தேதி காவல் நிலையத்தில் பணியில் போது, மாடியில் இருந்து இறங்கும் போது தவறி விழுந்து சுரேஷ்குமார் காயமடைந்தார். இதனையடுத்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Similar News

News October 11, 2025

விருதுநகர்: G.H ல் இவை எல்லாம் இலவசம்!

image

விருதுநகர் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவை
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அம்புலன்ஸ்
சிகிச்சையில் தாமதம் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் விருதுநகர் மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 04562-252388 தெரிவியுங்க… இந்த பயனுள்ள தகவலை Share பண்ணுங்க..

News October 11, 2025

ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாளுக்கு திருப்பதி பட்டு

image

புரட்டாசி பிரமோற்ஸவம் 5ம் திருநாளில் திருப்பதி ஏழுமலையான் சாற்றுவதற்காக ஆண்டாள் சூடி களைந்த மாலை, கிளி, பட்டு, மங்கல பொருட்கள் கொண்டு செல்லப்பட்டது. இதற்கு எதிர் சீராக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இருந்து ஆண்டாளுக்கு சாற்றுவதற்கு பட்டு வழங்கபட்டிருந்தது. இதனை நேற்று இரவு வெள்ளி குறடு மண்டபத்தில் ரெங்கமன்னாருடன் எழுந்தருளிய ஆண்டாளுக்கு பட்டு சாற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.

News October 11, 2025

விருதுநகரில்‌ நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்

image

விருதுநகரில் நாளை ஞாயிறு (12/10/25) போலியோ சொட்டு மருந்து 0 முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கபட உள்ளது. இந்த வயதிற்குள் உட்பட்டிருந்தால் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து தவறாமல் கொடுக்கவும். பேருந்து நிலையம் , அங்கன்வாடி மையங்கள் , இரயில் நிலையம் , ஆரம்ப சுகாதார நிலையம் போன்ற முக்கியமான இடங்களில் முகாம்கள் உள்ளன. SHARE பண்ணுங்க.

error: Content is protected !!