News October 3, 2025

ஈச்சர் வேன் பின்புறம் மோதியதில் ஒருவர் மரணம்

image

அரவக்குறிச்சி, மலைக்கோவிலூர் பாலம் அருகே சுருதீஸ்வரன் மற்றும் அவரது தாயார் நாகஜோதி இருவரும் அவர்களது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் பொழுது இவர்களுக்கு முன்னால் சரவணன் ஓட்டி சென்ற ஈச்சர் வேன் திடீரென பிரேக் போட்டதால் ஈச்சர் வேன் பின்புறம் சுருதீஸ்வரன் மோதியதில் படுகாயம் அடைந்து நேற்று சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இது குறித்து அரவாக்குறிச்சி போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.

Similar News

News November 15, 2025

சிலம்பம் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம்!

image

கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் திமுக சார்பில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட சிலம்பப் போட்டியில் குளித்தலை நாப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சத்திய பிரியா மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து பரிசுத்தொகை ரூபாய் 25000/- பெற்றுள்ளார். அதேபோல 17 வயதுக்குட்பட்ட பிரிவில் ஜமுனா என்பவர் மாவட்ட அளவில் மூன்றாம் இடத்தை பிடித்து ரூ.15000/- ஆயிரம் பரிசுத்தொகை பெற்றுள்ளார்.

News November 15, 2025

கரூர்: மாணவிக்கு பாலியல் தொல்லை – ஆசிரியர் கைது!

image

குளித்தலை அடுத்த நெய்தலூர் கிராமத்தை சேர்ந்த கார்த்திகேயன்(35). இவர் வெண்ணைமலை பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். கார்த்திகேயன் தான் பணிபுரியும் பள்ளியில் படித்து வரும் 14 வயது சிறுமிக்கு கடந்த 4 மாதமாக பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி புகார் அளிக்கையில் கரூர் அனைத்து மகளிர் நிலைய போலீசார் கார்த்திகேயனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

News November 15, 2025

கரூரில் தெரிய வேண்டிய முக்கிய இணையதளங்கள்!

image

1)கரூர் மாவட்ட இணையதளம்: https://karur.nic.in/ இதில் மாவட்டம் சார்ந்த அறிவிப்புகள், முக்கிய எண்கள் போன்றவைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
2)கரூர் மாநகராட்சி: https://www.tnurbantree.tn.gov.in/karur/ இதில் மாநகராட்சி சார்ந்த புகார்கள், ஆவணங்கள் போன்ற சேவைகளைப் பெறலாம்.
3)மாவட்ட நீதிமன்றம்: //karur.dcourts.gov.in/ இதில் நீதிமன்றம் சார்ந்த சேவைகள், வழக்கு குறித்த ஆவணங்களைப் பெறலாம்.

error: Content is protected !!