News October 3, 2025

வடசென்னை உலகில் சிம்பு படம்: வெற்றிமாறன்

image

சமீப காலமாக வெற்றிமாறன் எங்கு சென்றாலும் ‘வடசென்னை 2’ அப்டேட்டை ரசிகர்கள் கேட்டுக்கொண்டே இருக்கின்றனர். இந்நிலையில், ஒரு விழாவில் இதுகுறித்து பேசிய அவர், தனது அடுத்த படம் வடசென்னை 2 இல்லை என உறுதி செய்தார். சிம்புவை வைத்தே அடுத்த படத்தை எடுத்து வருவதாகவும் கூறினார். இது வடசென்னை 2 அல்ல என்ற வெற்றிமாறன், ஆனால் வடசென்னை உலகில் நடக்கும் கதை என அப்டேட் கொடுத்துள்ளார்.

Similar News

News October 3, 2025

BREAKING: சற்றுநேரத்தில் விஜய் வழக்கில் உத்தரவு

image

கரூர் துயரச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை ஐகோர்ட் மதுரை கிளையில் தொடங்கியுள்ளது. விஜய் தரப்பும், தமிழக அரசு தரப்பும் காரசாரமாக வாதம் செய்து வருகின்றன. குறிப்பாக, கரூர் செல்ல விஜய்க்கு பாதுகாப்பு கோரி தொடரப்பட்ட மனுவில் முக்கிய உத்தரவு இன்னும் சற்றுநேரத்தில் வெளியாகவுள்ளது. இந்த உத்தரவை பொறுத்தே, விஜய் கரூர் செல்வாரா, இல்லையா என்பது குறித்து முடிவு தெரியும்.

News October 3, 2025

ஹாஸ்பிடலில் இருந்து கார்கே டிஸ்சார்ஜ்

image

திடீர் உடல்நலக்குறைவால் கடந்த செப்.30-ம் தேதி பெங்களூருவில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் மல்லிகார்ஜுன கார்கே அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சுவாசப்பிரச்னை இருந்ததால் பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டது. தற்போது கார்கேவின் உடல்நிலை சீராக உள்ளதால் அவர் ஹாஸ்பிடலில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இருந்தாலும் டாக்டர்கள் அவரை ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளனர்.

News October 3, 2025

கரூர் துயரம்: கோர்ட் விசாரணை தொடங்கியது

image

கரூர் சம்பவம் தொடர்பான 9 வழக்குகளின் விசாரணை தொடங்கியுள்ளது. மதுரை HC-ல் அரசியல் கட்சி கூட்டங்களுக்கு புதிய விதிகளை வகுக்க கோரிய மனு, N.ஆனந்த் மற்றும் நிர்மல்குமார் ஆகியோரின் முன்ஜாமின், வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிய மனு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் இழப்பீடு தொகையை உயர்த்த கோரிய மனு, தவெகவிற்கு தடை கோரிய மனு உள்ளிட்ட மனுக்களின் விசாரணை சற்றுமுன் தொடங்கியது.

error: Content is protected !!