News October 3, 2025

மால்கம் எக்ஸ் பொன்மொழிகள்

image

*விமர்சனமில்லை என்றால் உங்களுக்கு வெற்றியில்லை.
*தடுமாற்றம் என்பது வீழ்ச்சியாகாது.
*சுதந்திரத்தையும் அமைதியையும் உங்களால் பிரித்துப் பார்க்க முடியாது. ஏனென்றால் சுதந்திரம் கிடைக்கிற வரை யாராலும் அமைதியாக இருக்க முடியாது.
*துக்கம் அழுகையைக் கொண்டு வரும். கோபமே மாற்றத்திற்கு வித்திடும்.
*கல்வி எதிர்காலத்திற்கான கடவுச் சீட்டு, நாளை என்பது இன்றே அதற்கு தயாராகிறவர்களுக்கானது.

Similar News

News October 3, 2025

BREAKING: உருவாகிறது புயல்

image

வடகிழக்கு அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக்கூடும் என IMD கணித்துள்ளது. புயலாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து அதற்கடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக உருவெடுக்கும். இதன் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு கனமழை பெய்யக்கூடும் எனவும் எச்சரித்துள்ளது.

News October 3, 2025

CM ஸ்டாலின் வரலாற்றை மறக்கக்கூடாது: வானதி

image

கலைஞர் நாணயத்தை வெளியிட்டவர்களும் RSS-ஐ சேர்ந்தவர்கள் என்பதை CM ஸ்டாலின் உணர வேண்டும் என வானதி சீனிவாசன் கூறியுள்ளார். RSS நாணையத்தை PM மோடி வெளியிட்டதை CM ஸ்டாலின் சாடியிருந்தார். அதற்கு பதிலளித்த வானதி, தனது கொள்கைகளுக்கு RSS செயல் வடிவம் கொடுத்துள்ளது என காந்தியே பாராட்டியிருக்கிறார் என குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த வரலாற்றை CM-க்கு நினைவூட்ட விரும்புகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

News October 3, 2025

மூலிகை: தொட்டால் சிணுங்கி மருத்துவ குணங்கள்!

image

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி, தொட்டால் சிணுங்கி இலையை வெண்ணெய் போல் அரைத்து, தயிர் கலந்து குடித்து வந்தால் வயிற்றுக் கடுப்பு குறையும் *தொட்டால் சிணுங்கி இலை ஒரு பிடி அரைத்து எலுமிச்சையளவு மோரில் கலந்து 3 நாள் சாப்பிட்டால் உடல் குளிர்ச்சியாகும் *தொட்டால் சிணுங்கி இலையை அரைத்து 10 கிராம் எடுத்து, காலையில் தயிருடன் கலந்து சாப்பிட சிறுநீர் எரிச்சல் குறையும். SHARE.

error: Content is protected !!