News October 3, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: வலியறிதல் ▶குறள் எண்: 477 ▶குறள்: ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கு நெறி. ▶பொருள்: வருவாய் அளவை அறிந்து, அதனை வகுத்து வழங்குவதே பொருளைச் சீராகக் காத்து வாழும் வழியாகு.

Similar News

News October 3, 2025

இன்னும் சற்றுநேரத்தில் விஜய் முக்கிய முடிவு

image

கரூர் துயர சம்பவத்தில் இறந்தவர்கள், காயமடைந்தவர்களின் விவரங்கள் விஜய்க்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கரூர் செல்ல பாதுகாப்பு அளிக்கக்கோரிய வழக்கு சற்றுநேரத்தில் ஐகோர்ட் மதுரை கிளையில் விசாரணைக்கு வரவுள்ளது. இதில், கரூர் செல்லலாம் என ஐகோர்ட் உத்தரவிட்டால், இன்றே பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து முடிவெடுக்க சற்றுநேரத்தில் கட்சி நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசிக்கவுள்ளார்.

News October 3, 2025

மூலிகை தேநீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?

image

ஃப்ரெஷ்ஷாக மூலிகை தேநீரை அருந்தினால், 50- 90% சத்து கிடைப்பதுடன், இந்த நன்மைகளும் போனசாக கிடைக்கும்: உடலுக்கு உடனடி உற்சாகத்தை அளிப்பதுடன், ஆற்றலை அதிகரிக்கும் ◆உடலில் நச்சுகளை நீக்கி தூய்மைப்படுத்தும் ◆உடலின் செயல்திறனை மேம்படுத்தும் ◆மனதுக்கு அமைதி, சாந்தம் கிடைக்கும் ◆ஜீரண மண்டல செயல்பாடுகளை எளிதாக்கும் ◆தூக்கமின்மை பிரச்சினையைக் குறைக்கும் ◆நோய் எதிர்ப்பு ஆற்றலை வலுப்படுத்தும். SHARE.

News October 3, 2025

CM வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

image

த்ரிஷா வீட்டை தொடர்ந்து, CM ஸ்டாலின் இல்லம் & கவர்னர் மாளிகைக்கும் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து, மோப்ப நாய்கள் உதவியுடன் போலீசார் நடத்திய சோதனையில் புரளி என தெரிய வந்துள்ளது. இருப்பினும், சென்னை ஆழ்வார்பேட்டை, கோட்டூர் புரத்தில் இருக்கும் CM வீட்டிற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. செல்போன் எண்ணை வைத்து மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!