News October 3, 2025
BBL லீக்கில் அஸ்வினை வாங்கிய சிட்னி தண்டர்

ILT20 ஏலத்தில் முன்னாள் CSK வீரர் அஸ்வினை வாங்க யாரும் ஆர்வம் காட்டாதது அவருக்கான பின்னடைவாக பார்க்கப்பட்டது. இந்நிலையில், பிக் பாஷ் லீக் (BBL) தொடரில் சிட்னி தண்டர் அணி அஸ்வினை தட்டி தூக்கியுள்ளது. இந்த சீசன் முழுவதும் இந்த அணிக்காக அவர் விளையாடவுள்ளார். கடந்த ஆகஸ்டில் IPL-ல் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த அஸ்வின், பிற நாடுகளில் நடக்கும் டி20 போட்டிகளில் கலந்துகொள்வேன் என்று கூறியிருந்தார்.
Similar News
News October 3, 2025
மூலிகை தேநீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?

ஃப்ரெஷ்ஷாக மூலிகை தேநீரை அருந்தினால், 50- 90% சத்து கிடைப்பதுடன், இந்த நன்மைகளும் போனசாக கிடைக்கும்: உடலுக்கு உடனடி உற்சாகத்தை அளிப்பதுடன், ஆற்றலை அதிகரிக்கும் ◆உடலில் நச்சுகளை நீக்கி தூய்மைப்படுத்தும் ◆உடலின் செயல்திறனை மேம்படுத்தும் ◆மனதுக்கு அமைதி, சாந்தம் கிடைக்கும் ◆ஜீரண மண்டல செயல்பாடுகளை எளிதாக்கும் ◆தூக்கமின்மை பிரச்சினையைக் குறைக்கும் ◆நோய் எதிர்ப்பு ஆற்றலை வலுப்படுத்தும். SHARE.
News October 3, 2025
CM வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

த்ரிஷா வீட்டை தொடர்ந்து, CM ஸ்டாலின் இல்லம் & கவர்னர் மாளிகைக்கும் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து, மோப்ப நாய்கள் உதவியுடன் போலீசார் நடத்திய சோதனையில் புரளி என தெரிய வந்துள்ளது. இருப்பினும், சென்னை ஆழ்வார்பேட்டை, கோட்டூர் புரத்தில் இருக்கும் CM வீட்டிற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. செல்போன் எண்ணை வைத்து மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News October 3, 2025
எனக்கு தூக்கம் கூட வரவில்லை: சீமான்

கரூர் துயரில் அவ்வளவு பேர் உயிரிழந்திருக்கும்போது, ‘குஷி’ ரீரிலீஸில் இளைஞர்கள் கொண்டாட்ட மனநிலையில் இருந்தனர் என சீமான் விமர்சித்துள்ளார். இந்த மனநிலையை பார்க்கும்போது சமூகம் எதை நோக்கி செல்கிறது என நினைத்து தூக்கம் கூட வரவில்லை என வேதனையுடன் தெரிவித்துள்ளார். மேலும், திமுக – தவெக இடையே ரகசிய தொடர்புள்ளதாக கூறிய அவர், பாஜக விஜய்க்கு ஆதரவளிப்பது வெளிப்படையாகவே தெரிவதாகவும் குறிப்பிட்டார்.