News October 3, 2025
பாரா தடகளம்: பதக்க வேட்டையில் இந்தியா

உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில், நேற்று நடைபெற்ற ஆடவர் Club throw F51 போட்டியில் இந்தியாவின் தரம்பீர் நைன் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். மேலும், ஆடவர் Discus throw F57 போட்டியில் அடுல் கெளசிக் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். இதுவரை 4 தங்கம், 5 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 11 பதக்கங்களை இந்தியா தன்வசப்படுத்தியுள்ளது. இப்போட்டிகள் அக்.5-ல் நிறைவடைகின்றன.
Similar News
News October 3, 2025
விஜய்யை கைது செய்யணுமா? பார்த்திபன் பதில்

சினிமா துறையில் இருப்பவர்களுக்கு சமூக பொறுப்பு தேவை, ஏனென்றால் மக்கள் அவர்களுக்கு அங்கீகாரம் அளிக்கின்றனர் என பார்த்திபன் கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், கரூர் துயரம் தொடர்பாக விஜய்யை கைது செய்ய வேண்டுமா என்று கேட்கப்பட்டது. அதற்கு, இப்படி பேசுவது அத்துமீறல் என்றார். இச்சம்பவம் தொடர்பாக ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது, நீதிபதி உள்ளார், விசாரணைக்கு பிறகே உண்மை தெரியவரும் என கூறினார்.
News October 3, 2025
ஸ்டாலினுக்கு மக்கள் சல்யூட்: செல்வப்பெருந்தகை

கரூர் துயர சம்பவத்தின்போது போலீஸார் தியாக உள்ளத்தோடு செயல்பட்டதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், சம்பவம் நடந்த அன்று உடனடியாக ஆலோசனை நடத்தியது மட்டுமின்றி, இரவே கரூர் வந்து சென்ற CM ஸ்டாலினுக்கு மக்கள் சல்யூட் அடிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், இச்சம்பவத்தில் பிணத்தின் மீது மலிவான அரசியலை பாஜக செய்வதாகவும் பகிரங்கமாக விமர்சித்தார்.
News October 3, 2025
இந்தியாவுக்கு செல்வது பெருமை: மெஸ்ஸி

இந்திய ரசிகர்களை சந்திக்க ஆர்வமுடன் உள்ளேன் என ஸ்டார் கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி கூறியுள்ளதன் மூலம், அவர் இந்தியாவிற்கு வருவது உறுதியாகியுள்ளது. அத்துடன், டிச.13-ல் கொல்கத்தா சால்ட், டிச.14 – மும்பை வான்கடே, டிச.14-ல் டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியங்களில் அவர் விளையாடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கேரளாவில் நடைபெறவுள்ள நட்பு ரீதியிலான போட்டிகளில் மெஸ்ஸி விளையாடுவது உறுதி செய்யப்படவில்லை.