News October 3, 2025
சென்னை சுங்கத்துறையில் தலை விரித்தாடும் லஞ்சம்

தமிழ்நாட்டின் வின்ட்ராக் நிறுவனம் சரக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பணிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 45 நாட்களாக சென்னையில் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து தொல்லை தருவதாக வின்ட்ராக் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த ஆண்டு மட்டும் சுங்கத்துறை 2 முறை லஞ்சம் கேட்டுள்ளதாகவும், தமிழ்நாட்டில் ஏற்றுமதி இறக்குமதியை நிறுத்திவிட்டு இந்தியாவை விட்டு வெளியேறுவதாக வின்ட்ராக் நிறுவனம் தெரிவித்துள்ளது
Similar News
News October 3, 2025
சென்னை முதலிடம்! எதில் தெரியுமா?

சென்னை ரயில் கோட்டம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், கடந்த 30-ம் தேதி சிறப்பு டிக்கெட் சோதனையின் போது உரிய டிக்கெட் இன்றி பயணித்த 3,254 பேரிடம், ரூ.18.22 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும், டிக்கெட் இன்றி பயணித்த ஒரு லட்சத்து 21,189 பேரிடம் இருந்து ரூ.6.25 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதிக அபராத தொகையை வசூலித்து சென்னை முதலிடம் பிடித்ததாக தெரிவித்துள்ளனர்.
News October 2, 2025
சென்னை ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

சென்னையில் இன்று (02.10.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள். அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம். மேலும், காவல் அதிகாரிகளின் கைபேசி என்னும் கொடுக்கப்பட்டுள்ளது. அதனுடன் காவல் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது
News October 2, 2025
மெரினாவில் பாரம்பரிய கலைவிழா

சென்னை மெரினா கடற்கரையில் வரும் அக்டோபர் 5, 2025 (ஞாயிறு) அன்று பாரம்பரிய கலைவிழா நடைபெறுகிறது. இவ்விழாவில் நம்ம பாரம்பரிய கலைகள், இசை, நடனம் ஆகியவை ஒரே மேடையில் காட்சிப்படுத்தப்பட உள்ளன. குடும்பத்துடன் வந்து கலந்து கொண்டு மகிழலாம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இளம் தலைமுறையினருக்கு நமது பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை அறிமுகப்படுத்தும் அரிய வாய்ப்பாக இது அமையும்.