News October 3, 2025
மயிலாடுதுறையில் பராமரிப்பு பணிக்காக மேம்பாலம் மூடல்

மயிலாடுதுறை காவிரி நகர் மேம்பாலம் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதனால் நேற்று இரவு 12 மணி முதல் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமம் பாராமல் நாளை முதல் மாற்று வழிகளில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக மூவலூர் – மாப்படுகை சாலையை பயன்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர் நிர்வாகம் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 3, 2025
மயிலாடுதுறை: வேலை தேடும் இளைஞர்களே உஷார்

மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த வேலை தேடும் இளைஞர்கள் ஆன்லைனில் வேலை தேடும் போது போலியான வலைதள பக்கங்களில் சென்று உங்கள் சுயவிவரங்களை பதிந்து உங்கள் பணத்தை இழக்க வேண்டாம் என மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தியுள்ளது மேலும் இது போன்ற சைபர் குற்றங்கள் குறித்து 1930 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
News October 2, 2025
மயிலாடுதுறையில் இரவு ரோந்து காவலர்கள் விவரம்

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், மயிலாடுதுறை சீர்காழி உட்கோட்டங்களுக்கு உட்பட்ட 14 காவல் நிலையங்களுக்கும் இன்று இரவு 10 மணி முதல் (அக்.,2) காலை 8 மணி வரை இரவு ரோந்து செல்லும் போலீசாரின் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொலைபேசி எண்ணும் தெரிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 2, 2025
மயிலாடுதுறையில் குட்கா கடத்திய நபர் கைது

சீர்காழியில் போலீசார் நடத்திய வாகன சோதனையில், 20 கிலோ குட்கா கடத்திய ரிஸ்வான் (21) என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும் இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வாண்டு மாவட்டத்தில் 541 வழக்குகள் பதிவு, 556 பேர் கைது, 1706 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் குட்கா விற்பனை, கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.