News October 3, 2025
இம்மாதம் முதல் சீனாவிற்கு நேரடி விமான சேவை

இந்தியா – சீனா இடையிலான நேரடி விமான சேவை வரும் 26-ம் தேதி முதல் மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இருநாட்டு அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா, சீனா உடனான எல்லை பிரச்னை காரணமாக, கடந்த 4 ஆண்டுகளாக இருநாடுகளுக்கும் இடையிலான நேரடி விமான சேவை நிறுத்தப்பட்டது.
Similar News
News October 3, 2025
ராமாயண வில்லன்கள் தற்போதும் உள்ளனர்: UP CM

ராமாயணம், மகாபாரதத்தின் வில்லன்கள் இன்றும் புதிய வடிவில் உள்ளதாக உ.பி., CM ஆதித்யநாத் கூறியுள்ளார். இன்றும் சூர்ப்பனகை, தடாகா போன்றோரை சமூகம் எதிர்கொள்வதாக தெரிவித்த அவர், அவர்களிடமிருந்து சனாதன தர்மத்தை பின்பற்றுவோர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று எச்சரித்தார். சாதி, தீண்டாமை என்ற பெயரில் சமூகத்தை பிரிப்பவர்கள் முந்தைய பிறவியில் சூர்ப்பனகையின் கூட்டாளிகளாக இருந்திருப்பர் என்றும் கூறினார்.
News October 3, 2025
ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆளவில்லை: மஸ்க் ரியாக்ஷன்

‘ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆளவில்லை’ என்ற X பதிவிற்கு, சிந்திப்பது போன்ற எமோஜியை பதிவிட்டு ரீட்வீட் செய்துள்ளார் எலான் மஸ்க். தற்போது இது வைரலாகியுள்ளது. அந்த பதிவில், ‘இந்தியர்கள் இங்கிலாந்தில் கால் பதித்து ஆங்கிலேயர்களாக மாறினால், பின்னர் இந்தியாவில் கால் பதித்த ஆங்கிலேயர்கள் இந்தியர்களாக மாறினர். எனவே பிரிட்டிஷார் இந்தியாவை ஆளவில்லை’ என உள்ளது. இந்த பதிவில், காலனித்துவமே இல்லை என கூறப்படுகிறது.
News October 3, 2025
மணிகண்டனுக்காக மெனக்கெட்ட ரிஷப் ஷெட்டி

‘காந்தாரா சாப்டர் 1’ பட தமிழ் டப்பிங்கில் மணிகண்டன் ரிஷப் ஷெட்டிக்கு வாய்ஸ் கொடுத்துள்ளார். இந்நிலையில், இயற்கையாகவே டப்பிங்கிற்கான ஆசிர்வாதம் அவருக்கு உள்ளதாக ரிஷப் கூறியுள்ளார். ஆனால், கர்நாடக டப்பிங் யூனியனில் மணிகண்டன் பதிவு உறுப்பினர் இல்லை என்பதால், குறிப்பிட்ட தொகை கொடுத்து சிறப்பு அனுமதி வாங்கி மணியை டப்பிங் செய்ய வைத்ததில் பெருமை என்றும் ரிஷப் நெகிழ்ந்துள்ளார்.