News October 3, 2025

விஜய்யின் தளபதிகளுக்கு ஜாமின் கிடைக்குமா?

image

கரூர் துயர வழக்கில் தவெக முக்கியத் தலைவர்களான புஸ்ஸி ஆனந்த், CTR நிர்மல் குமாரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கைது நடவடிக்கையை தவிர்க்க அவர்கள் தாக்கல் செய்த முன்ஜாமின் மனுக்கள் நாளை மதுரை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வரவுள்ளன. அதனுடன் தவெகவை தடை செய்யக் கோருவது உள்ளிட்ட மனுக்களையும் நீதிபதிகள் விசாரிக்க உள்ளனர். புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் இருவரும் தற்போது தலைமறைவாக உள்ளனர்.

Similar News

News October 3, 2025

ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆளவில்லை: மஸ்க் ரியாக்‌ஷன்

image

‘ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆளவில்லை’ என்ற X பதிவிற்கு, சிந்திப்பது போன்ற எமோஜியை பதிவிட்டு ரீட்வீட் செய்துள்ளார் எலான் மஸ்க். தற்போது இது வைரலாகியுள்ளது. அந்த பதிவில், ‘இந்தியர்கள் இங்கிலாந்தில் கால் பதித்து ஆங்கிலேயர்களாக மாறினால், பின்னர் இந்தியாவில் கால் பதித்த ஆங்கிலேயர்கள் இந்தியர்களாக மாறினர். எனவே பிரிட்டிஷார் இந்தியாவை ஆளவில்லை’ என உள்ளது. இந்த பதிவில், காலனித்துவமே இல்லை என கூறப்படுகிறது.

News October 3, 2025

மணிகண்டனுக்காக மெனக்கெட்ட ரிஷப் ஷெட்டி

image

‘காந்தாரா சாப்டர் 1’ பட தமிழ் டப்பிங்கில் மணிகண்டன் ரிஷப் ஷெட்டிக்கு வாய்ஸ் கொடுத்துள்ளார். இந்நிலையில், இயற்கையாகவே டப்பிங்கிற்கான ஆசிர்வாதம் அவருக்கு உள்ளதாக ரிஷப் கூறியுள்ளார். ஆனால், கர்நாடக டப்பிங் யூனியனில் மணிகண்டன் பதிவு உறுப்பினர் இல்லை என்பதால், குறிப்பிட்ட தொகை கொடுத்து சிறப்பு அனுமதி வாங்கி மணியை டப்பிங் செய்ய வைத்ததில் பெருமை என்றும் ரிஷப் நெகிழ்ந்துள்ளார்.

News October 3, 2025

குஜராத் எல்லையில் பாக்., உள்கட்டமைப்பு தீவிரம்

image

குஜராத் எல்லையோரம் உள்ள சர் க்ரிக் என்ற சர்வதேச எல்லைக்கோடு பகுதியில் பாக்., ராணுவம் தனது உள்கட்டமைப்பை அதிகரித்து வருவதாக ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ஒருவேளை பாக்., ஏதேனும் அச்சுறுத்த முயன்றால், இந்தியா அதற்கு தக்க பதிலடியை கொடுக்கும் என்பதை மறந்திட வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். சமீபத்தில் நிகழ்ந்த பஹல்காம் தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா பதிலடி கொடுத்தது.

error: Content is protected !!