News April 14, 2024
உடனடியாக உதவிய தவெக நிர்வாகிகள்

சென்னை பெருங்குடியில் ஆட்டோ ஓட்டுநர் விஜய் குமார் என்பவரது வீடு மின் கசிவு காரணமாக தீக்கிரையானது. இதனை அறிந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், அவருக்கு ₹30,000 பணம் மற்றும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை கொடுத்து உதவினர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியான நிலையில், தவெக தொண்டர்கள் வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.
Similar News
News February 7, 2026
அண்ணாமலை நற்பணி மன்றத்தின் அதிரடி முடிவு

‘அண்ணாமலை நற்பணி மன்றம்’ 58 பாஜக மாவட்டங்களிலும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நாளை நற்பணி மன்ற நிர்வாகிகள் கூட்டம் நெல்லையில் நடைபெறவுள்ளது. இதில், அண்ணாமலையை சட்டப்பேரவைக்கு அனுப்புவதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது. குறிப்பாக, நாங்குநேரி தொகுதியில் அண்ணாமலையை களமிறக்க விருப்ப மனு அளிக்கவும் மன்றத்தினர் தயாராகவுள்ளனராம். உங்கள் கருத்து என்ன?
News February 7, 2026
FLASH: விஜய் உடன் நேரடி மோதல்.. திமுக போடும் திட்டம்!

விஜய் எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை நேரடியாக எதிர்க்க திமுக திட்டமிட்டுள்ளது. விக்கிரவாண்டி, வேளச்சேரி, விருகம்பாக்கம், நாகை ஆகிய 4 தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் விஜய் களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை விஜய், நாகையில் போட்டியிட்டால் தற்போது விசிகவின் வசம் இருக்கும் அத்தொகுதியில் திமுகவே நேரடியாக வேட்பாளரை இறக்க ஆயத்தமாகி வருகிறது. விசிகவுக்கு வேறு தொகுதி ஒதுக்கப்பட உள்ளதாம்.
News February 7, 2026
பட்ஜெட்டில் தமிழகம் வஞ்சிப்பு: திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்

பிப்.12-ல் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தை வஞ்சித்த பாஜக & அதற்கு துணைபோகும் அதிமுகவை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தின் அனைத்து மாநகரங்களில் தலா ஒரு இடம் & பேரூர், ஒன்றிய அளவிலும் ஆர்ப்பாட்டத்தை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.


