News October 2, 2025
இரவில் தனியாக நடந்து செல்ல சிறந்த நாடுகள்?

இரவில் தனியாக நடந்து செல்வதற்கு எந்த நாடுகள் பாதுகாப்பானவை என்று Gallup-யின் சமீபத்திய உலகளாவிய பாதுகாப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் எவ்வளவு பாதுகாப்பாக உணர்கிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டு முதல் 10 இடங்கள் பட்டியலிடப்பட்டு உள்ளது. அவை எந்தெந்த நாடுகள் என்று மேலே போட்டோக்களாக உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. உங்களுக்கு பிடித்த நாடு எது?
Similar News
News October 3, 2025
மணிகண்டனுக்காக மெனக்கெட்ட ரிஷப் ஷெட்டி

‘காந்தாரா சாப்டர் 1’ பட தமிழ் டப்பிங்கில் மணிகண்டன் ரிஷப் ஷெட்டிக்கு வாய்ஸ் கொடுத்துள்ளார். இந்நிலையில், இயற்கையாகவே டப்பிங்கிற்கான ஆசிர்வாதம் அவருக்கு உள்ளதாக ரிஷப் கூறியுள்ளார். ஆனால், கர்நாடக டப்பிங் யூனியனில் மணிகண்டன் பதிவு உறுப்பினர் இல்லை என்பதால், குறிப்பிட்ட தொகை கொடுத்து சிறப்பு அனுமதி வாங்கி மணியை டப்பிங் செய்ய வைத்ததில் பெருமை என்றும் ரிஷப் நெகிழ்ந்துள்ளார்.
News October 3, 2025
குஜராத் எல்லையில் பாக்., உள்கட்டமைப்பு தீவிரம்

குஜராத் எல்லையோரம் உள்ள சர் க்ரிக் என்ற சர்வதேச எல்லைக்கோடு பகுதியில் பாக்., ராணுவம் தனது உள்கட்டமைப்பை அதிகரித்து வருவதாக ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ஒருவேளை பாக்., ஏதேனும் அச்சுறுத்த முயன்றால், இந்தியா அதற்கு தக்க பதிலடியை கொடுக்கும் என்பதை மறந்திட வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். சமீபத்தில் நிகழ்ந்த பஹல்காம் தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா பதிலடி கொடுத்தது.
News October 3, 2025
மால்கம் எக்ஸ் பொன்மொழிகள்

*விமர்சனமில்லை என்றால் உங்களுக்கு வெற்றியில்லை.
*தடுமாற்றம் என்பது வீழ்ச்சியாகாது.
*சுதந்திரத்தையும் அமைதியையும் உங்களால் பிரித்துப் பார்க்க முடியாது. ஏனென்றால் சுதந்திரம் கிடைக்கிற வரை யாராலும் அமைதியாக இருக்க முடியாது.
*துக்கம் அழுகையைக் கொண்டு வரும். கோபமே மாற்றத்திற்கு வித்திடும்.
*கல்வி எதிர்காலத்திற்கான கடவுச் சீட்டு, நாளை என்பது இன்றே அதற்கு தயாராகிறவர்களுக்கானது.