News October 2, 2025

சிறுபிள்ளைத்தனமான அரசியல்: அண்ணாமலை

image

சென்னையில் அமைதியாக பேரணி சென்ற RSS அமைப்பினரை காவல்துறை கைது செய்துள்ளதாக அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை செய்பவர்களும், முதியோர்களை கொலை செய்பவர்களும் சுதந்திரமாக சுற்றிக் கொண்டிருப்பதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும், இதுபோன்ற சிறுபிள்ளைத்தனமான அரசியல் விளையாட்டுக்களை திமுக கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Similar News

News October 3, 2025

குஜராத் எல்லையில் பாக்., உள்கட்டமைப்பு தீவிரம்

image

குஜராத் எல்லையோரம் உள்ள சர் க்ரிக் என்ற சர்வதேச எல்லைக்கோடு பகுதியில் பாக்., ராணுவம் தனது உள்கட்டமைப்பை அதிகரித்து வருவதாக ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ஒருவேளை பாக்., ஏதேனும் அச்சுறுத்த முயன்றால், இந்தியா அதற்கு தக்க பதிலடியை கொடுக்கும் என்பதை மறந்திட வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். சமீபத்தில் நிகழ்ந்த பஹல்காம் தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா பதிலடி கொடுத்தது.

News October 3, 2025

மால்கம் எக்ஸ் பொன்மொழிகள்

image

*விமர்சனமில்லை என்றால் உங்களுக்கு வெற்றியில்லை.
*தடுமாற்றம் என்பது வீழ்ச்சியாகாது.
*சுதந்திரத்தையும் அமைதியையும் உங்களால் பிரித்துப் பார்க்க முடியாது. ஏனென்றால் சுதந்திரம் கிடைக்கிற வரை யாராலும் அமைதியாக இருக்க முடியாது.
*துக்கம் அழுகையைக் கொண்டு வரும். கோபமே மாற்றத்திற்கு வித்திடும்.
*கல்வி எதிர்காலத்திற்கான கடவுச் சீட்டு, நாளை என்பது இன்றே அதற்கு தயாராகிறவர்களுக்கானது.

News October 3, 2025

ஏர் இந்தியா விமான விபத்து: இன்று முக்கிய ஆலோசனை

image

கடந்த ஜூனில் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த ஒருவரை தவிர 241 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பான உயர்மட்ட விசாரணை நடைபெற்று வரும் நிலையில், விமான விபத்து புலனாய்வு பணியகத்தின் இன்றைய ஆலோசனை கூட்டத்தில், இந்திய விமானிகள் சங்கத்தினர் கலந்துகொள்ளவுள்ளனர். இதில், விமான விபத்து முன்னெச்சரிக்கைகள் தொடர்பாக ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!