News October 2, 2025

செல்போன் ரீசார்ஜ்.. மக்களுக்கு அதிர்ச்சி

image

இந்தாண்டு இறுதியில் ரீசார்ஜ் கட்டணங்களை 10 முதல் 12% வரை உயர்த்த டெலிகாம் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, குறைந்தபட்ச டேட்டா + கால் திட்டங்களை ₹249-ல் இருந்து ₹299-ஆக ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் உயர்த்தின. இந்தநிலையில், மீண்டும் நிறுவனங்கள் கட்டண உயர்வை அறிவித்தால், குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டங்களின் விலை ₹40 வரை உயர வாய்ப்புள்ளது.

Similar News

News October 3, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: வலியறிதல் ▶குறள் எண்: 477 ▶குறள்: ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கு நெறி. ▶பொருள்: வருவாய் அளவை அறிந்து, அதனை வகுத்து வழங்குவதே பொருளைச் சீராகக் காத்து வாழும் வழியாகு.

News October 3, 2025

BBL லீக்கில் அஸ்வினை வாங்கிய சிட்னி தண்டர்

image

ILT20 ஏலத்தில் முன்னாள் CSK வீரர் அஸ்வினை வாங்க யாரும் ஆர்வம் காட்டாதது அவருக்கான பின்னடைவாக பார்க்கப்பட்டது. இந்நிலையில், பிக் பாஷ் லீக் (BBL) தொடரில் சிட்னி தண்டர் அணி அஸ்வினை தட்டி தூக்கியுள்ளது. இந்த சீசன் முழுவதும் இந்த அணிக்காக அவர் விளையாடவுள்ளார். கடந்த ஆகஸ்டில் IPL-ல் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த அஸ்வின், பிற நாடுகளில் நடக்கும் டி20 போட்டிகளில் கலந்துகொள்வேன் என்று கூறியிருந்தார்.

News October 3, 2025

மொரோக்கோவில் Gen Z போராட்டம்: 3 பேர் பலி

image

நேபாளத்தை தொடர்ந்து மொரோக்கோவில் Gen Z தலைமுறையினரின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு போதுமான நிதி வழங்கப்படாத நிலையில், 2023 உலகக் கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கு கோடிக்கணக்கில் செலவழிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு எதிராகவும், ஊழலுக்கு எதிராகவும் 6-வது நாளாக போராட்டம் தொடர்கிறது. இதில் 3 பேர் போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!