News October 2, 2025
அட்டகாசமான போஸ்களில் ஐஸ்வர்யா ராஜேஷ் PHOTOS

காக்கா முட்டை, தர்மதுரை, வடசென்னை ஆகிய படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அசத்திய ஐஸ்வர்யா ராஜேஷ், தனது போஸ்களின் மூலமும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சமீபத்தில் அவர் பதிவிட்ட போட்டோஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தனது அட்டகாசமான போஸ்களால், ரசிகர்களை அசர வைத்துள்ளார். மேலே போட்டோஸ் உள்ளன. பிடித்திருந்தா லைக் போடுங்க.
Similar News
News October 3, 2025
ஏர் இந்தியா விமான விபத்து: இன்று முக்கிய ஆலோசனை

கடந்த ஜூனில் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த ஒருவரை தவிர 241 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பான உயர்மட்ட விசாரணை நடைபெற்று வரும் நிலையில், விமான விபத்து புலனாய்வு பணியகத்தின் இன்றைய ஆலோசனை கூட்டத்தில், இந்திய விமானிகள் சங்கத்தினர் கலந்துகொள்ளவுள்ளனர். இதில், விமான விபத்து முன்னெச்சரிக்கைகள் தொடர்பாக ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News October 3, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: வலியறிதல் ▶குறள் எண்: 477 ▶குறள்: ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கு நெறி. ▶பொருள்: வருவாய் அளவை அறிந்து, அதனை வகுத்து வழங்குவதே பொருளைச் சீராகக் காத்து வாழும் வழியாகு.
News October 3, 2025
BBL லீக்கில் அஸ்வினை வாங்கிய சிட்னி தண்டர்

ILT20 ஏலத்தில் முன்னாள் CSK வீரர் அஸ்வினை வாங்க யாரும் ஆர்வம் காட்டாதது அவருக்கான பின்னடைவாக பார்க்கப்பட்டது. இந்நிலையில், பிக் பாஷ் லீக் (BBL) தொடரில் சிட்னி தண்டர் அணி அஸ்வினை தட்டி தூக்கியுள்ளது. இந்த சீசன் முழுவதும் இந்த அணிக்காக அவர் விளையாடவுள்ளார். கடந்த ஆகஸ்டில் IPL-ல் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த அஸ்வின், பிற நாடுகளில் நடக்கும் டி20 போட்டிகளில் கலந்துகொள்வேன் என்று கூறியிருந்தார்.