News October 2, 2025
38-ம் ஆண்டில் பாம்பன் பாலம் PHOTOS

1988 வரை ராமேஸ்வரத்தை இந்தியாவுடன் இணைக்க பாம்பன் ரயில் பாலம் மட்டுமே இருந்தது. 1974-ல் அன்றைய பிரதமர் இந்திரா காந்தியால் அடிக்கல் நாட்டப்பட்டு, 1988 அக்டோபர் 2-ம் தேதி ‘அன்னை இந்திரா காந்தி பாலம்’ என பெயரிடப்பட்டு, அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியால், பாம்பன் சாலைப் பாலம் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது. தற்போது இந்த பாலம் 38-ம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. இதன் சிறப்பை SHARE பண்ணுங்க.
Similar News
News October 3, 2025
BBL லீக்கில் அஸ்வினை வாங்கிய சிட்னி தண்டர்

ILT20 ஏலத்தில் முன்னாள் CSK வீரர் அஸ்வினை வாங்க யாரும் ஆர்வம் காட்டாதது அவருக்கான பின்னடைவாக பார்க்கப்பட்டது. இந்நிலையில், பிக் பாஷ் லீக் (BBL) தொடரில் சிட்னி தண்டர் அணி அஸ்வினை தட்டி தூக்கியுள்ளது. இந்த சீசன் முழுவதும் இந்த அணிக்காக அவர் விளையாடவுள்ளார். கடந்த ஆகஸ்டில் IPL-ல் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த அஸ்வின், பிற நாடுகளில் நடக்கும் டி20 போட்டிகளில் கலந்துகொள்வேன் என்று கூறியிருந்தார்.
News October 3, 2025
மொரோக்கோவில் Gen Z போராட்டம்: 3 பேர் பலி

நேபாளத்தை தொடர்ந்து மொரோக்கோவில் Gen Z தலைமுறையினரின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு போதுமான நிதி வழங்கப்படாத நிலையில், 2023 உலகக் கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கு கோடிக்கணக்கில் செலவழிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு எதிராகவும், ஊழலுக்கு எதிராகவும் 6-வது நாளாக போராட்டம் தொடர்கிறது. இதில் 3 பேர் போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளனர்.
News October 3, 2025
இன்றைய நல்ல நேரம்

▶அக்டோபர் 3, புரட்டாசி 17 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 145 AM – 2:45 PM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶குளிகை: 7:30 AM – 9:00 AM ▶திதி: ஏகாதசி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்▶பிறை: வளர்பிறை