News October 2, 2025
பூரி உப்பி வருவதற்கு இதை பண்ணுங்க

பூரி சுடும் போது பலருக்கும் அது உப்பி வரவில்லை என்ற கவலை ஏற்படும். இதற்கு நீங்கள் மாவு பிசையும் போது சிறிதளவு ரவை சேருங்கள், எண்ணெய் நன்கு சூடான பிறகே கடாயில் பூரி மாவை போட வேண்டும். மேலும், பூரி அதிக எண்ணெய் பிடிக்காமல் இருக்க மாவை இறுக்கமாக பிசையாதீர்கள். அதே போல எண்ணெயில் சிறிதளவு உப்பு சேர்த்தால், பூரியில் அதிக எண்ணெய் பிடிக்காது. இதை உங்களுடைய நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க..
Similar News
News October 2, 2025
அட்டகாசமான போஸ்களில் ஐஸ்வர்யா ராஜேஷ் PHOTOS

காக்கா முட்டை, தர்மதுரை, வடசென்னை ஆகிய படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அசத்திய ஐஸ்வர்யா ராஜேஷ், தனது போஸ்களின் மூலமும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சமீபத்தில் அவர் பதிவிட்ட போட்டோஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தனது அட்டகாசமான போஸ்களால், ரசிகர்களை அசர வைத்துள்ளார். மேலே போட்டோஸ் உள்ளன. பிடித்திருந்தா லைக் போடுங்க.
News October 2, 2025
காந்தி பிறந்தநாளில் உயிரை விட்ட காந்தியவாதி..!

சுதந்திர போராட்ட வீரரும், மூத்த காந்தியவாதியுமான டாக்டர் குன்வந்தராய் கண்பத்லால் பரிக்(101) காலமானார். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் (1942) தீவிரமாக ஈடுபட்டு சிறை தண்டனை அனுபவித்த இவர், சுதந்திரத்துக்கு பின்பும் கோவா விடுதலை, நெருக்கடி நிலை போராட்டங்களில் ஈடுபட்டார். இவர் 1951 முதல் அனைத்து தேர்தல்களிலும் வாக்களித்துள்ளார். காந்தியவாதியான இவர் காந்தியின் பிறந்தநாளான இன்று காலமானார். ஜெய் ஹிந்த்!
News October 2, 2025
குழந்தைகளை இப்படி திருத்துங்க!

உங்கள் குழந்தைகள் செய்யும் தவறுகளை எப்படி திருத்துவது என தெரியவில்லையா? திட்டவோ, அடிக்கவோ செய்யாதீங்க, தப்பை ஒருபோதும் அவர்கள் திருத்திக்கொள்ள மாட்டார்கள். மாறாக, இந்த 3 எளிய வழிகளை நீங்கள் செய்து பார்க்கலாம். ➤எந்த மாதிரியான சூழலில் தவறு செய்கிறார்கள் என கவனித்து, அதை பொறுமையாக எடுத்துரையுங்கள். ➤எப்படி சரி செய்யலாம் என சொல்லி கொடுங்கள் ➤தவறை திருத்திக் கொண்டால் பாராட்டுங்கள். SHARE.